ஹர்தால் கடையடைப்பு செயற்பாடுகளிலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் இறங்க வேண்டாம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

ஹர்தால் கடையடைப்பு செயற்பாடுகளிலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் இறங்க வேண்டாம்

Share This
பைஷல் இஸ்மாயில், ரீ.கே.றஹ்தத்துல்லாஹ் - 

ஏனைய சமூகங்களிடையே சமாதானம், சகோரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே வாழ்ந்து வரும் முஸ்லீம்களின் பாதுகாப்பு நலன் கருதியும் நாளை வெள்ளிக்கிழமை(09) எந்தவித ஹர்தால் கடையடைப்பு செயற்பாடுகளிலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் இறங்க வேண்டாம் என அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை இணைந்து  வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு (08) அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை என்பன இணைந்து அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் நடத்திய கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் பதில் தலைவர்  மௌலவி ஐ.எல்.ஏ. காஷிம் ஸூரி மற்றும் பள்ளிவாயல்களின் தலைவர்கள், உலமாக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளி வாயல்களின் சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையினால் பல தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் ஜூம்ஆ பிரசங்கத்தினை சமாதானம், சகோதரத்துவம், சகவாழ்வு நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விடயங்களை உள்ளடக்கியனவாக அமைய வேண்டும் என்பதுடன் இக்குத்பா பிரசங்கத்தை 1.00மணியுடன் முடித்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல இனங்களும் சமாதனமாகவும், நல்லிணக்கத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற விடயத்தை முன்நிறுத்தி உருக்கமாக துஆ பிரார்த்தனைiயே மேற்கொள்வதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் பதில் தலைவர் மௌலவி ஹாஸீம் ஸூரி இங்கு கருத்து தெரிவிக்கையில்,

ஒரு மனிதன் உலகில் பிறந்து வாழும் போது எல்லாம் சந்தோசமாக இருக்கும் என நாம் நினைத்துவிடக் கூடாது. கஷ்டம் இருக்கினறது. கவலையுள்ள விடயங்கள் இருக்கின்றது. நஷ்டம் இருக்கின்றது. இவ்வாறான நிலையில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எங்களது வேகத்துக்கு மட்டும் நாங்கள் இ;டமளிப்பதா? நாங்கள் விவேகத்துடன் செயற்பட வேண்டி இருக்கின்றதா? என்பதனைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.

நிட்சமாக வாலிபர்கள் உணர்வுடையவர்கள். ஒரு வயதானவரிடம் இருக்கும் பண்புகள், அமைதி, பொறுமை, பணிவு என்பனவற்றை ஒரு வாலிபரிடம் எதிர்பார்க்க முடியாததுதான். இருந்தாலும் இளைஞர்கள் நிருவாகங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் உணர்வுபூர்வமாக ஒரு செயற்பாட்டை முன்னெடுக்கும் போது அந்த நேரத்திற்கு அது பொருத்தமானதாக இருந்தாலும் பின்னர் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக அது அமைந்து விடும். இளைஞர்கள் எமது சொத்துக்களாக உள்ளனர். அவர்களது வீரம், வேகம் என்பனவெல்லம் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். 

சிங்கள மக்கள் எல்லோரையும் நாம் எதிரி;களாக பார்க்கக் கூடாது. ஒரு சில இனவாதிகளே பிரச்சினைகளையும், மோதல்களையும் தூண்டும் வன்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் பெரும்பான்மையான சிங்கள சகோதரர்கள் இதனை வெறுக்கின்றனர். அனுதாபப் படுகின்றனர். அவர்களின் மதத்தலைவர்களில் அதிகமானவர்கள் சிறந்த பண்புகளைக் கொண்டவர்கள் உள்ளனர். நாம் சிங்கள மக்களை வங்சிக்கும் போது அல்லது வெறுப்புடன் பார்க்கும் போது பெரும்பான்மையான நல்லவர்களினதும் மனங்கள் பாதிக்கப்படும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை சுமூகமடைவதற்காகவும், அமைதி, சமாதானம், இன ஐக்கியத்துக்காகவும் நாம் அனைவரும் துஆ பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என்பதுடன் பாதிப்புக்குள்ளான எமது முஸ்லிம் சகோதரர்களுக்காக உதவி செய்து, அவர்களின் துக்கத்தில் பங்கு கொண்டு  அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதுடன் பாதிக்கப்பட்டுள்ள எமது சகோதரர்களுக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தையும், கவலையையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE