தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 9, 2018

முஸ்லிம் தலைமைளுக்கு ஞானசார சவால்!
இந்த நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் தலைமைகளுக்கும் ஞானசார தேரர் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இந்த நாட்டின் உண்மை நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முடியுமானால் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை மாலை 5 மணி வரை கால அவகாசம் தருவதாகவும், மனதில் தைரியம், உறுதி இருந்தால் பகிரங்க மேடையில், அனைத்து ஊடகங்களுக்கு முன்பாகவும் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள் என சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று -08- இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த சவாலை விடுத்துள்ளார். இந்த நாட்டிலுள்ள உண்மை சம்பவங்களை சாட்சி, ஆதாரங்களுடன் நான் நிரூபித்து காட்டுகின்றேன்.

மேலும், கடந்த அரசாங்கத்தால் செய்ய முடியாததை செய்வதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தற்போது இந்த அரசாங்கத்தால் எதுவும் முடியாத நிலையில் மீண்டும் மஹிந்த மீது பலி சுமத்துகின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Post Top Ad

Your Ad Spot

Pages