Mar 12, 2018

சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் நூல்கள் மீதான கிராக்கி இல்லாமல் போகாதுஉங்­க­ளது நாற்­ப­தா­வது நூலின் வெளியீ­ட்டுப் பின்­னணி குறித்து கூறுங்கள்?

கடந்த 5ஆண்­டு­க­ளாக  நான் மேற்­கொண்ட சில ஆய்­வு­களும் நடப்பு வரு­டத்தில் மேற்­கொண்ட ஆய்­வு­களும் உள்­ள­டங்­க­லாக இந்நூல் வெளி­வ­ரு­கின்­றது. இலங்கை முஸ்­லிம்கள் குறித்து ஒரு முழு­மை­யான சித்­தி­ரத்தை இந்நூல் தரு­கின்­றது என நம்­பு­கின்றேன். அந்த வகையில் முஸ்­லிம்­களின் சமூ­க­வியல், சனத்­தொகை, கல்வி, பொரு­ளா­தாரம், அர­சியல், வர­லாறு, சமூக நிறு­வ­னங்கள், முஸ்லிம் புல­மைத்­துவம், சமூகப் பிரச்­சி­னைகள், முஸ்லிம் தனியார் சட்டம் ஆகிய பத்து பிர­தான அத்­தி­யா­யங்­களை உள்­ள­டக்கி இந்நூல் எழு­தப்­பட்­டுள்­ளது. பின்­னி­ணைப்­பாக உள்ள பகு­தியில் மாவட்ட ரீதியில் முஸ்­லிம்கள் வாழும் கிரா­மங்­களும் ஊர்­களும் பட்­டி­யல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. புதிய அர­சியல்  மாற்­றத்தில் முஸ்­லிம்கள் எதிர்­பார்ப்­பது என்ன என்ற கட்­டு­ரையும் அதில் உள்­ள­டங்­கு­கின்­றது.

416 பக்­கங்­களைக் கொண்ட இந்நூல் சம­கால இலங்கை முஸ்­லிம்கள் குறித்து ஒரு தர­வுப்­ப­குப்­பாய்வு ஆவ­ண­மாக இருக்­கு­மென்­பது எனது நம்­பிக்கை. இந்­நூலில் இடம்­பெறும் ஒவ்­வொரு அத்­தி­யாயம் குறித்து விரி­வாக ஆராய விரும்­பு­கின்­ற­வர்­க­ளுக்கு அது ஒரு அடிப்­ப­டை­யாக இருக்­கு­மெனக் கரு­து­கின்றேன். 
இதற்கு முந்­திய உங்­க­ளது எழுத்து முயற்­சிகள் எவை தொடர்­பா­னவை?
ஏற்­க­னவே எழு­தப்­பட்­ட­வற்றில் சில மொழி­பெ­யர்க்­கப்­பட்­டவை. 4 நூல்கள் அவ்­வாறு மொழி­பெ­யர்க்­கப்­பட்­டுள்­ளன. ஏனை­யவை உசாத்­துணை நூல்­க­ளையும் கட்­டு­ரை­க­ளையும் அடிப்­ப­டை­யாக கொண்­டவை. தற்­சிந்­தனை வாய்ந்த நூல்­களும் அதில் உள்­ளன. 2002 இல் எனது முதல் நூல் வெளி­யா­னது.

நவீ­னத்­து­வத்தின் தோல்வி எனும் அந்­நூ­லுக்கு பேரா­சி­ரியர் கா.சிவத்­தம்பி அணிந்­துரை வழங்­கினார். வாழைச்­சேனை நண்பர் ஏ.பி.எம்.இத்ரீஸ், அவ­ரது உயிர்ப்பை தேடும் வேர்கள் என்ற பதிப்­ப­கக்தின் மூலம் இந்­நூலை வெளி­யிட்டார். இந்நூல் ஐரோப்­பிய சிந்­த­னை­களை மறு­வா­சிப்­புக்கு உட்­ப­டுத்­து­கின்­றது. 8 கட்­டு­ரை­களை உள்­ள­டக்­கிய இந்­நூலின் மொழி சற்று கறா­ரா­கவே இருந்­தது. இச்­சந்­தர்ப்­பத்தில் நண்பர் இத்­ரீஸை நன்­றி­யுடன் நினை­வு­கூ­ரு­கின்றேன்.
எத்­துறை சார்ந்த நூல்­களை அதிகம் எழு­தி­யுள்­ளீர்கள்?
எனது தேடலும் ஆய்வும் 8 துறை­களை தழு­வி­யவை. வர­லாறு, சர்­வ­தேச உற­வுகள், உள­வியல், தத்­துவம், கல்வி, பின் கொல­னித்­துவம், இஸ்­லா­மிய சட்டம் போன்ற துறை­களில் எனது நூல்கள் வெளி­வந்­துள்­ளன. குறிப்­பாக சர்­வ­தேச உற­வுகள் மற்றும் உள­வியல், கல்வி தொடர்­பான நூல்­களே அதிகம் வெளி­வந்­துள்­ளன. ஒப்­பீட்டு ரீதியில் சர்­வ­தேச உற­வுகள் தொடர்­பான நூல்­களே அதிகம் வெளி­வந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

உள­வி­யலில் குழந்தை உள­வியல், குடும்ப உள­வியல், பெற்­றோரும், பிள்­ளை­களின் கல்­வியும் குழந்­தை­களின் அசா­தா­ரண நடத்­தைகள் கட்­டி­ள­மைப்­ப­ருவ உள­வியல், இளை­ஞர்­களின் நடத்தை பிறழ்­வுகள் போன்ற நூல்கள் வாச­கர்­க­ளிடம் பெரும் வர­வேற்பை பெற்­றவை. 
எழு­து­வ­தற்­கான நேரம் என்று குறிப்­பிட்ட நேரத்தை ஒதுக்­கி­யுள்­ளீர்­களா? 
எழு­து­வ­தற்கு மனோ­நிலை (Mind) முக்­கி­ய­மா­னது. நாம் விரும்பும் எல்லா நேரங்­க­ளிலும் எழு­த­மு­டி­யாது. அதற்­கென உடல் உற்­சா­கமும் உள ­உற்­சா­கமும் தேவை.

சில போது தேவையும் நிர்ப்­பந்­தமும் எழுத தூண்டும் அந்­நே­ரத்­திலும் எழு­த­வேண்­டி­யுள்­ளது. தற்­சிந்­தனை வாய்ந்த கருத்­துக்­க­ளையும் அவ­தா­னங்­க­ளையும் எழு­து­வது எவ­ருக்கும் எளி­தா­னது.

ஆனால், ஒரு பிரச்­சி­னையின் மையத்தை சரி­யாக மதிப்­பி­டு­வ­தாயின் அதற்­கென்று தர­வு­களை சேக­ரிப்­பதும் பகுப்­பாய்வு செய்­வதும் முக்­கி­யம். இது சற்­று­ கா­லத்தை எடுத்­து­வி­டக்­கூ­டி­யது. அதிக நேரம் இதற்­குத் ­தேவை. எனவே, எழுத்து தாம­த­மா­வது இயல்­பா­னது.

ஆனால், ஆழ்ந்த ஆய்வும் தேடலும் எழுத்­தாக வரும்­போது அதன் செறியும் வீச்சும் கன­தி­யா­ன­தாக இருக்கும்.

இது எனது அனு­பவம். இலங்­கையில் முஸ்லிம் கல்வி எனும் எனது நூலும் இஸ்­லா­மிய எழுச்­சியின் முன்­னோ­டிகள் எனும் நூலும் மிகுந்த பிர­யத்­த­னத்­துடன் எழு­தப்­பட்­டவை. 
சமூ­கத்தில் வாசிப்பு பழக்கம் தூர்ந்து செல்லும் நிலையில் புத்­த­கங்­களின் இடங்­களை சமூக ஊட­கங்கள் விழுங்­கி­வரும் இக்­கா­ல­கட்­டத்தில் எழுத்­தாளன் முகம்­கொ­டுக்கும் சவால்கள் என்ன? 
இது ஒரு பெரிய பிரச்­சி­னையே. ஏனெனில் ஏற்­க­னவே வாசிப்பு ஆர்வம் மிகக்­கு­றை­வாக இருந்த சமூ­கத்தில் சமூக வலைத்­த­ளங்கள் பெரு­ம­ளவு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

இதனால் வாசிப்­பு­ மீ­தான ஆர்வம் இன்னும் குறை­வ­டை­வ­தற்­கான வாய்ப்பே உள்­ளது. இந்­நி­லையில் எழுத்­தா­ளர்கள் தமது நிலைப்­பா­டு­களை தக்­க­வைப்­பது சிர­ம ­சாத்­தி­ய­மா­னது. ஆயினும் நடை­முறை யதார்த்தம் ஒன்று இங்கு உள்­ளதை நாம் கவ­னிக்­க­ வேண்டும். எவ்­வ­ள­வுதான் சமூக ஊட­கங்கள் விரி­வ­டை­கின்­ற­போதும் சீரி­ய­ஸான, ஆய்­வுத்­தன்­மை­யுள்ள ஆழ்ந்த விவ­கா­ரங்­களை அச்சு ஊட­கங்கள் வாயி­லா­கவே அறி­ய­வேண்­டி­யுள்­ளது. இதற்கு பிர­தா­ன­மாக இரண்டு கார­ணங்கள் உள்­ளன.
 
முத­லா­வது, சமூக வலைத்­த­ளங்­களில் சீரி­ய­ஸான ஆய்­வுகள் வரு­வ­தில்லை. அவை லைட் ரீடிங், வாச­கர்­க­ளுக்கு தீனி போடு­பவை. இரண்­டா­வது சீரி­ய­ஸான எந்­த­வொரு சமூக வலைத்­தள கட்­டு­ரை­க­ளையும் எவரும் முழு­மை­யாக கண­னித்­தி­ரையில் வாசிக்க முடி­யாது. அவர் குறைந்­த­பட்சம் அதனை பிரதி எடுத்தே வாசிக்க வேண்டும். 

இவ்­வா­றான கார­ணங்­களால் நூல்­களின் கிராக்கி முற்­றிலும் இல்­லாமல் போகாது. அவை எப்­பொ­ழுதும் வாசிக்­கப்­பட்டே ஆக­வேண்­டு­மென்ற நிலை நீடிக்கும். இதுவே எழுத்­தா­ளர்­க­ளுக்­குள்ள ஒரே நம்­பிக்கை.
வெற்­றி­க­ர­மான எழுத்­தா­ளர்­களின் வாசிப்பு எப்­ப­டி­யி­ருக்க வேண்டும் என கரு­து­கி­றீர்கள்?
வாசிப்பு இல்­லாமல் எழுத்து இல்லை. நாம் வாசிக்கும் ஒவ்­வொரு புதுப்புது தரு­ணத்­திலும் நமக்குள் அறி­யாமை இருக்­கின்­றது என்­ப­தையே உணர்­கின்றோம். பிளேட்டோ சொன்­னது போல் எனது அறி­யா­மையைத் தவிர நான் எத­னையும் அறிந்­தவன் அல்ல என்ற பிரக்­ஞையே வாசிக்கும் போது மேலி­டு­கின்­றது. 

ஒருவர் தேர்ந்த வாசிப்­பா­ள­ராக இருக்­கும்­போதே அவர் விரிந்த அளவில் சிந்­திக்க தொடங்­கு­கின்றார். பல்­வேறு கருத்­துக்­கள், சிந்­த­னைகள் என்­ப­வற்றை ஆழ்ந்து படிக்­கும்­போது அவற்­றி­லி­ருந்து தனக்­கான ஒரு சிந்­திக்கும் முறையை அவர் வகுத்­துக்­கொள்­கின்றார். இது கலை இலக்­கிய எழுத்து போன்­ற­தல்ல சமூக மாற்றத்­திற்­கான எழுத்து. ஆய்­வையும் தேட­லையும் அடிப்­ப­டை­யாக கொண்­டவை. தர­வு­க­ளி­லி­ருந்தே உண்­மைகள் பெறப்­ப­டு­கின்­றன.

முடி­வுகள் எட்­டப்­ப­டு­கின்­றன. தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. 

நாம் வாழும் யுகம் தர­வு­களின் யுகம். தர­வுகள் இல்­லாமல் யாரும் சமூ­கப்­பி­ரச்­சி­னை­களை துல்­லி­ய­மாக பேச முடி­யாது.  எனவே வாசிப்பு இங்கு பல்­வேறு நோக்­கங்­களைக் கொண்­டது. கருத்­துக்கள் சிந்­த­னை­களை மட்­டு­மன்றி தர­வுகள் புள்­ளி­ வி­ப­ரங்­க­ளையும் உள்­ளீர்க்­கின்­ற­ வகையில் வாசிப்பு அமைய வேண்டும்.

இன்­னொ­ரு­பக்கம் அவற்றை சரி­யான எழுத்தில் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான முன்­வைப்புத் திறனை வளர்த்­துக்­கொள்ள வேண்டும். முன்­வைப்புத் திறனில் மொழி முக்­கி­ய­மா­னது. 
வாச­கர்­களை கவர்ந்­தி­ழுக்கும் மொழி தமிழில் கைகூட வேண்­டு­மாயின் அதற்­கென எத்­த­கைய எழுத்­தா­ளர்­களின் படைப்­பி­லக்­கி­யங்­களை வாசிக்க­ வேண்­டு­மென நினைக்­கின்றீர்?
90 களில் “கணை­யாளி” என் கவ­னத்தை ஈர்த்த முக்­கிய இதழ். “சுப­மங்­களா” அரு­மை­யான மொழியின் உறை­விடம். காலச்­சு­வடு, தீரா நதி, புதிய கலா­சாரம், உயிர்மை போன்ற சம­கால தமி­ழ­கத்து இலக்­கிய இதழ்­களை தொடர்ச்­சி­யாக வாசிக்க வேண்டும்.

கடந்த 15 ஆண்­டு­க­ளுக்கு மேலாக இவற்றை நான் மொழி வளத்தை செறி­வாக்கி கொள்ளும் நோக்கில் வாசிக்­கின்றேன். 

சுந்­தர ராம­சாமி, பிர­பஞ்சன், பிரமிள், சுஜாதா, ஞான­க்கூத்தன், புது­மைப்­பித்தன் போன்ற எழுத்­தா­ளர்­களின் நாவல்­களும் கதை­களும் ஒரு விட­யத்தை எப்­ப­டிச்­சொல்ல வேண்­டு­மென்­ப­தற்­கான உத்­தி­களை நமக்கு கற்­றுத்­த­ரு­கின்­றன. நாம் எதைச் சொல்­கின்றோம் என்­பது முக்­கி­யம். அதை­விட அதை எப்­ப­டிச்­ சொல்­கின்றோம் என்­பது முக்­கியம். 

எல்­லா­வற்­றையும் இலக்­கிய நயத்­தோடு சொல்­ல­வேண்­டு­மென்­ப­தல்ல. பேசு­பொருள் சார்ந்து நாம் தெரி­வு­செய்யும் மொழி வேறு­ப­டலாம். உதா­ர­ண­மாக விஞ்­ஞானம் அல்­லது தத்­துவம் அல்­லது சமூ­க­வியல் பற்றி நாம் பேசும்­போது கதை இலக்­கி­யத்தின் மொழியை அங்கு பிர­யோ­கிப்­ப­தில்லை. ஆனால் எதையும் தெளி­வா­கவும் சொற்­சு­ருக்­க­மா­கவும் கருத்­துச்­செ­றி­வா­கவும் சொல்­வ­தற்­கான ஒரு மொழி எழுத்­தா­ள­னுக்கு கைகூ­ட­வேண்டும்.
ஒரு நூலின் வெற்றி என்று எதைக் ­க­ரு­து­கின்­றீர்கள்?
ஒரு புத்­தகம் பூரண நிலை எய்­திய ஒரு­ க­லைப்­ப­டைப்­பன்று. ஒரு புத்­த­கத்தின் சாதனை அது புத்­த­க­மா­வ­தல்ல. மாறாக அது பொது­மக்கள் பரப்பில் எத்­த­கைய அதிர்வை உரு­வாக்­கு­கின்­றது என்­ப­தி­லேயே அதன் சாதனை தங்­கி­யுள்­ளது. வாச­கர்­களின் உள்­ளங்­களை தைத்து சிந்­த­னையை கிளறும் எந்­த­வொரு நூலும் வெற்றி பெற்­று­விட்­டது என்றே கூற­வேண்டும் உலகில் மிக அதிகம் விற்­ப­னை­யான நூல்­களின் பட்­டி­யலை நோக்­கினால் இவ் உண்­மையை புரிந்­து­கொள்­ளலாம். எதையும் யாரும் எழு­திக்­கு­விக்­கலாம் ஆனால் அவர் வெற்­றி­பெற்ற எழுத்­தா­ளராய் இருக்க முடி­யாது. 
நூல் வெளியீட்டு முயற்­சியில் உள்ள பிர­தான சவால்கள் என்ன?
தொடர்ச்­சி­யான எழுத்­தா­ளர்­க­ளுக்கு எக்­கச்­சக்­க­மான சவால்கள் உள்­ளன. அச்­ச­கத்­திற்கு பெருந்­தொ­கை­யான பணத்தை ஒரே முறையில் செலுத்த வேண்டும். நூல்­க­ளுக்கு எந்த மதிப்பும் இல்­லாத வாசிப்பின் ஆர்வம் அற்ற ஒரு சமூக அமைப்பில் புத்­தகம் வெளி­யி­டு­வது என்­பது கிட்­டத்­தட்ட ஒரு தற்­கொலை முயற்­சிதான். 

காலம், நேரம், முயற்சி, பணம் என்று ஏகப்­பட்ட முத­லீ­டுகள் தேவைப்­ப­டு­கின்­றன. ஆனால், மறு­பக்கம் இதற்கு கிடைக்­கின்ற சமூக அங்­கீ­கா­ரமும் சந்தை வாய்ப்பும் மிகக்­கு­றை­வா­கவே உள்­ளன.

இதனால்தான் அத்தி பூத்­தால்போல் புத்­தகம் வெளி­யி­டு­கின்­ற­வர்கள் வெளி­யீட்டு விழாவை தமது செலவை ஈடு­செய்யும் வகையில் தடல்­புடல் என்று நடத்­து­கின்­றனர். அந்த­ நூ­லோடு அவரை கண்­டு­பி­டிப்­பது கடி­ன­மா­கின்­றது. இன்­னொரு பக்கம் தொடர்ச்­சி­யாக எழு­து­கின்­ற­வர்கள் ஒரு வாச­கர் ­வட்­டத்தை தக்­க­வைத்துக் கொள்­கின்ற வாய்ப்­பு­முள்­ளது.

அவர்கள் எப்­ப­டி­யேனும் அந்த எழுத்தாளனது நூலை தேடி­வா­சிக்­கின்­றனர். அதனால் நூல்கள் ஏதோ ஒரு வகையில் தீர்ந்து போகின்­றன. என்­னைப் ­பொறுத்­த­வரையில் ஆயிரம் நூல்கள் பெரும்­பாலும் மூன்று மாத இடை­வெ­ளியில் விற்­ப­னை­யா­கி­விடும். கடந்த 20 ஆண்­டு­கால இடை­வெ­ளியில் 55000 நூல்­களை அச்­சிட்­டுள்ளேன். அதில் ஒவ்­வொரு பிர­தி ­மட்­டுமே என் கைவசம் உள்­ளது. 
இலங்கை, இந்­திய சூழலில் உங்­க­ளது நூல்கள் மீள்­ப­திப்பு பெற்­றுள்­ள­னவா?
மீள்­ப­திப்பில் எனது ஆர்வம் கொஞ்சம் குறை­வா­கவே உள்­ளது. அதை­விட புதிய தலைப்பில் இன்­னொரு நூலை எழுது­வ­தி­லேயே  அதிக ஆர்வம் காட்­டு­கின்றேன்.

எனினும் இலங்­கையில் இஸ்­லாமிக் புக் ஹவுஸ் எனது சில நூல்­களை மீள்­ப­திப்பு செய்­துள்­ளது. சென்­னையை தள­மா­க­கொண்ட புதிய விடியல் மற்றும் திண்ணைத் ­தோ­ழர்கள் பதிப்­பகம், மது­ரையை தள­மா­கக்­கொண்ட மெல்­லினம் பதிப்­பகம் என்­ப­னவும் இது­வரை 4 நூல்­களை மீள்­ப­திப்பு செய்­துள்­ளன. எனது அனைத்து நூல்­க­ளையும் மீள்­ப­திப்பு செய்­வ­தற்­கான ஒப்­பந்­த­மொன்றை தமி­ழக பதிப்­ப­கத்­தா­ருடன் மேற்­கொண்­டுள்ளேன்.

தமி­ழ­கத்தில் சென்னை, மதுரை, திரு­நெல்­வேலி, கோயம்புத்தூர் ஆகியவற்றிலும் எனக்கு ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அவர்கள் தொடர்ந்து எனது நூல்களை வாசிக்கின்றனர். கைவசம் இல்லாத தலைப்புக்களையும் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு கேட்கின்றனர். 40ஆவது நூலுக்கு பின்னர் சில தேர்ந்த தலைப்புக்களை மீள்பதிப்பு செய்வதற்கான உத்தேசம் உள்ளது. 
எதிர்வரும் நூல் வெளியீட்டு விழா குறித்து சொல்லுங்கள்?
எனது 40 நூல்களிலும் ஏற்கனவே 3 நூல்களுக்கே வெளியீட்டு விழா நடந்தது. இப்போது 4ஆவது நூல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுகின்றது.

இது எனது 40ஆவது வயதில் வெளிவரும் 40ஆவது நூல் என்ற வகையிலும் 416 பக்கங்களை கொண்ட ஓர் ஆய்வு நூல் என்ற வகையிலும் சமகால இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பானது என்ற வகையிலுமே இந்நூல் வெளியீட்டு விழா ஒன்றை காண்கின்றது. அல்ஹம்துலில்லாஹ் கொழும்பு, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் செவ்வாய் 29.11.2016 மாலை 06.30 மணியளவில் இந்நூல் வெளியிடப்படுகின்றது. 

பிரதம அதிதியாக கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, விழா தலைவராக கலாநிதி இனாமுல்லாஹ், நூல் ஆய்வாளராக அஷ்ஷெய்க் பிர்தௌஸ் (நளீமி) ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சமூக ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network