தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 8, 2018

இன்று இரவு நடந்து கொண்டிருக்கும், உறுதிப்படுத்தப்பட்ட சில சம்பவங்கள்பல சகோதரர்கள் கள நிலவரம் கேட்டுத் தொடர்பு கொள்கிறார்கள்.சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. பலருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. செய்திகளை மக்களுக்கு தெரியாமல் செய்வதுதான் அரசாங்கங்கள் செய்யும் திட்டம். குரல்கள் இயக்கம் (Voices Movement] அனைத்து தகவல்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறது.

இன்று இரவு நடந்து கொண்டிருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட  சில சம்பவங்கள்..

அக்குரணை கஸாவத்த பள்ளிவாயல் தாக்கப்பட்டுள்ளது.

பேராதெனிய பள்ளிவாயலுக்கு பெற்றோல் குண்டு எறியும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

எல்பிடிய பள்ளிவாசலுக்கு அருகில் கல்வீச்சு.பெரிய பாதிப்புகள் இல்லை.

பிலிமதலாவையில் இருக்கும் ஒரு கடை எரியூட்டப்பட்டிருக்கிறது.

ஹீபிடிய பள்ளிவாயலுக்கும் வீடுகளுக்கும் கல்வீசப்பட்டிருக்கிறது.

கல்முனை-நற்பிட்டி முனையில் சுமார் 30 ஆமி உத்தியோகத்தர்கள் நுழைந்திருக்கின்றனர்.

வடுவகமை சந்தியில் பாஹிம் என்பவரின் கடை உடைத்து உரிமையாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளது


Post Top Ad

Your Ad Spot

Pages