இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காது, என அறிவித்துள்ளது.

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (IOC) நேற்று நள்ளிரவு (24) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள்களின் விலையை அதிகரித்திருந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.

தமது கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள்களின் விலை தொடர்ந்தும் அதே நிலையில் பேணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில், இதுவரை 92 ஒக்டேன் பெற்றோல் ரூபா 117 ஆகவும் டீசல் ரூபா 95 இற்கும் விற்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: