சமூக வலைத்தளங்களில் பஹத் ஏ.மஜீதுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் தீவிர செயற்பாட்டாரளர்கள்

இன்று அம்பாறை பள்ளிவாசல் வளாகத்திலிருந்து பஹத் ஏ.மஜீத் முகப்புத்தகத்தில் பதிவிட்ட புகைப்படம்இன்றுஜும்ஆ தொழ அம்பாறைக்கு போக அழைத்த பஹத்தை பலர் விமர்சிக்கிறார்கள்.

முதலில் சமுதாயத்தில் எல்லா வகையான எதிர்வினைகளையும் ஆற்ற ஆட்கள் வேண்டும். ஒரு பிரச்சினையை அரசியல் ரீதியாக, சமயோசிதமாக, உணர்ச்சி ரீதியாக எல்லாம் கையாளவேண்டும். அப்படியில்லாம் சமயோசிதமாக அணுகுகிறோம் என்பதுபோல் சிராஜ் மஸ்ஹூர் மாதிரி, பின்னணி அரசியல் என்று நெடுங்கட்டுரை எழுதிக்கொண்டிருந்தால் , இந்த சோத்து மாடுகள் பேஸ்புக்லதான் எழுதும். நெட்டையும் ரெண்டு நாள் கட் பண்ணிவிடால் அவனுகளையும் ஓப் செய்துவிடலாம் என்று நினைப்பான் பள்ளி உடைக்க திட்டம் போடுபவன்.

ஒவ்வொரு பூரணை தினத்திலும் சிங்களவன் பஸ் வண்டியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு முறைவைத்து சின்ன சின்ன விகாரைக்கெல்லாம் போய் சில் அனுஷ்ட்டிக்கிறான். இவனுகளுக்கு  அம்பாறை பள்ளிக்கு போக கூப்பிட்டா தொடை நடுங்குகிறது. அப்படியானால் எப்படி நம்மவன் அம்பாறையில் போய் தொழில் செய்வது? அவனுக்கு அதை விட பயம் இருக்கவேண்டுமே.

அம்பாறை பள்ளிக்கு இன்று அதிகமானோர் சென்றால், அது பேரினவாதிகளுக்கு ஒரு செய்தியை தெளிவாக சொல்லும். இனி இவனுகள் சும்மா இருக்கமாட்டானுகள் , எனவே வாலைச்சுருட்டிக்கொள்வது நல்லது என்பதே அது. மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்த நபிகளார்கூட சும்மா இருக்கவில்லை. மதீனாவில் இருந்தவாறு மக்கத்து வர்த்தக கூட்டங்களை பறிமுதல் செய்யவில்லையா?  அப்படி செய்யப்போய்தானே முதல் யுத்தம் கூட வந்தது! குனூத் மட்டுமல்ல இஸ்லாமிய வழிகாட்டல். இதுவும் தான்! அட கிழக்கு கூட மதீனாவாக செயற்படவில்லை என்றால்?

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் என்றுதானே அல் குர்ஆனில் கூட வருகிறது!

(இதற்கு தெம்பு இல்லாதவர்கள், சிரியா போட்டோ போட்டு, கனடா பிரதமரை பாராட்டி,அரேபிய ஆட்சியாளர்களை விமர்சித்து வீட்டுக்குள் இருந்து போஸ்ட் போடலாம். உங்கட பிரச்சினையை பாக்க உங்களுக்கு பயம். ஆனால் சிரியா பிரச்சினையில் சவூதி மக்களை இறக்கவேண்டும் என்று எழுதிக்கிழிக்க மட்டும் உங்களுக்கு எந்த அருகதை கிடையாது)

Eksaar Abdul Khattar
Share on Google Plus

About NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment