Mar 1, 2018

ஒற்றுமையெனும் கயிற்றை பற்றிப்பிடியுங்கள்; நம்மை நாமே காட்டிக்கொடுத்துவிட கூடாது


ரி.எம் இம்தியாஸ்

சில இனவாத விஷமிகளால் அம்பாறையில் இருக்கும் முஸ்லிம் பள்ளி வாயல் தாக்கப்பட்டு புனித குர்ஆன்னையும் எரிய விட்டு பள்ளியில் தங்கியிருந்த முஸ்லிம் வாலிபரையும் தாக்கிவிட்டு போனார்கள் அல்லாஹ் போதுமானவன் இச் செயலுக்கு அதுக்குரிய தண்டனை இறைவன் வழங்குவான், அதற்காக கையேந்துகிறோம். இப் பிரச்சினைக்கு காரணமான விடயம் சொல்லப்படுவது அம்பாறையில் இருக்கும் ஹாசிம் hotel என்று சொல்லப்படும் இரவு நேர முஸ்லிம் கடையொன்றில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சகோதரர் ஓருவர் வந்து கொத்துரொட்டி கேட்க்கும் போது அந்த கொத்துரொட்டியில் கருகலைப்பு மாத்திரை கலந்து அந்த சகோதரருக்கு வழங்கியதாகவும் அதை அவர்கள் கண்டு வாக்குவாதம் பெற்று அது ஒரு இனவாத முறன்பாட்டுக்கு போய் கடையில் வேலை பார்க்கும் வாலிபரிம் அதை கேட்டு வீடியோ பதிவும் செய்திருக்கிறார்கள் அந்த வீடியோவில் தெளிவாக புரிகிறது அந்த வாலிபனின் முக நிலை பயந்து இன வாதிகள் சுற்றி நிக்கையில் அவர்கள் கேக்கும் கேள்விக்கு என்ன என்டு சரியாக புரியாமல் கடசியில் அந்த வாலிபன் உயிர் அச்சத்தில் ஆம் என்ற வார்த்தை அவ்விடத்தில் சொல்லப்படுகிறது ஏன் நாம் யாராக இருந்தாலும் அதைத்தாம் அவ்விடத்தில் சொல்லிருப்போம் தமது உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக. சரி அவ்வாறு நடந்துருந்தால் நீங்கள் கையில் சட்டத்தை எடுக்க வேண்டிய தேவைப்பாடு அந்த இடத்தில் இனவாதிகளுக்கு இல்லை அப்படி ஓரு சட்டமும் நம் நாட்டில் இல்லை ஏன் நம் நாட்டில் ஓரு சட்டமா ஓழுங்கு என்ற பெயரில் ஓரு அமைச்சரை நியமிக்க வேண்டியில்லைய பொலிஸ் என்றது தேவையில்லை அப்படியென்றால் நீங்கள் உரிய முறையில் அதை கொண்டு பொலிஸ் நிலையத்தில் அறிவித்து அதன் ஊடாக அந்த பிரச்சினைய முகம் கொடுத்திருக்க வேண்டும் இது அழகாக புரிகிறது திட்டம்மிட்டு இனவாதிகளால் நடக்கபட்டவை என்று இதன் உண்மை முகம் இறைவன் கூடிய சீக்கிரம் காட்டுவான் இன்ஸா அல்லாஹ் அந்த இனவாத கூட்டுகளுக்கு இந்த நாடு தண்டனை வழங்காமல் விட்டாலும் இறைவனுடய தண்டனையில் தப்பித்துகொள்ள முடியாது. குற்றம் செய்தவர் அவ்விடத்தில் தண்டனைய பெறவேண்டும் கண்டிப்பா யாராக இருந்தாலும் இந்த இனவாத செயலை உடனடிகாக துரித படுத்தி இன் நாட்டு அரசங்கம் அதுவும் நல்லாட்சி யென்றை பெயரை காப்பாத்திக் கொண்டு சட்டத்துக்கு முன் நிற்க வேண்டும்

இந்த நல்லாட்சியை கொண்டுவர முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது இதில் மேற்கூறிய பிரச்சினைய இன் நாட்டு அதிமேகு ஐனாதிபதி மைத்திரி பாலசிறிசேன அவர்கள் துரிதபடுத்தி குற்றவாளிகளை இனம் கன்டு எடுக்க வேண்டும்,அ குறிப்பாக நம்மவர்கள் இதில் வீன் விவாதங்களை பேசி நீங்களை தீர்மானித்து சமூகவலைதளங்களில் எழுதவேண்டாம்

அரசியல் வாதிகள் வந்து அரசியல் லாபகங்களுக்காக பயன் படுத்துகிறார்கள் இந்த பிரச்சினைய என்றெல்லாம் பேசி நம்மவர்களை நாமே காட்டிக்கொடுக்க முனையக்கூடாது.

புனிதமான குர்ஆன் எரியபட்டிருக்கிறது இன்னும் என்ன வேண்டும் அன்று அழுத்கம,நேற்று அம்பாறை,நாளை நமக்கு ஆகவே நாம் அனைவரும் ஓற்றுமைய கையாள வேண்டும் என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள் ஓன்று சேருங்கள்...
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post