ஜெனிவா பயணமாகிறார் பஹாத் ஏ மஜீத்!இன்னும் பல பகல்களில்
நாம் குருதி வியர்வை சிந்தலாம்
இன்னும் பல இரவுகளை 
நாம் மரண மூச்சில் கழிக்கலாம்
ஆயினும் நம்பிக்கையோடு
நமது சுதந்திரம் எழுதப்படும் வரை
நமது இரத்தம் உறைந்து விடாது. 
-வேதாந்தி-

முஸ்லிம் தேசியத்தின் சார்பாக எமது அருமைக்குரிய நண்பர் பஹத் ஏ மஜீத் Fahath A Majeed அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

அவர் நாளை (18) ஜெனீவா புறப்படுகின்றார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கிய மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஒரு காணொளி ஒன்றினையும் அவர் அங்கு எடுத்துக் கொண்டு செல்கின்றார். 

முஸ்லிம் தலைமைகள் வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்கும் இத்தருணத்தில் அவர் தன்னந்தனியாக மனித உரிமை மாநாட்டில் பங்கு கொள்வதற்காக எடுத்த முயற்சிகளுக்கு அவரை நாம் கட்சி பேதம் மறந்து மனம் விட்டு வாழ்த்தத்தான் வேண்டும்.

கல்வியிலும் ஊடகத்துறையிலும் மனித உரிமைகளிலும் பதவி பட்டங்கள் பல பெற்றுள்ள பஹாத், அவைகளைக் கொண்டு பணம் தேடாமல் முஸ்லிம் சமுகத்தின் எழுச்சிக்காகவும் விடிவுக்காகவும் முன்னின்று செயற்பட்டு வருகின்றமை முஸ்லிம் சமுகத்தில் ஒரு முன்மாதிரிக்கு எடுத்துக் காட்டாகும்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த ஜெனீவா செல்லும் உன்னை இந்த முஸ்லிம் தேசியம் ஒருநாளும் மறந்து விடாது. உன்னுடைய அரசியல் கனவுகளுக்கு முஸ்லிம் தேசியம் எப்போதும் ஊன்று கோலாகவே இருக்கும்.

பஹாத், அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) யின் பழைய மாணவராவார். 

வெற்றியுடன் வாரும் தோழர். 

முஸ்லிம் தேசியப் பணியில்

ஏ.எல்.ஆஸாத்
சர்ஜூன் ஜமால்தீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...