கண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் சந்தேகம்! சீஐடி விசாரணை
அஸ்ரப் அலி பரீட்
1. குறித்த இளைஞனுக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு பாரதூரமான காயங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்று பொலிசார் தெரிவிப்பு
2. தெல்தெனிய மருத்துவமனையில் இருந்தவரை வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவையும் உட்கொண்டுள்ளார். இயல்பாக காணப்பட்டுள்ளார்.
3. கடைசி சில நாட்களில் கண்டிக்கு மாற்றப்பட்டவுடன் திடீரென நோய்வாய்ப்பட்டு மர்ம முறையில் உயிரிழந்துள்ளார்.
4. அவரது மரணத்துக்கு முன்னரே மார்ச் 03ம் திகதி முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து திட்டமிடப்பட்டு திகதி குறிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களுக்கு மேலதிகமாக முக்கியமான சாட்சியமொன்றும் பொலிசாரின் விசாரணையில் சிக்கியுள்ளது.