Header Ads

ad728
  • Breaking News

    முல்லைத்தீவில் மாயாபுர என்ற பெயரில் சிங்கள குடியேற்றம் கிராமம்!



    முல்லைத்தீவில் தமிழ் மீனவர்கள் வசித்து வரும் பகுதியில் மாயாபுர என்ற பெயரில் கிராமம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    சிங்கள குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ரவிகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    இந்த கிராமத்தில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மாயாபுர கிராமத்திற்கு எதிராக இதற்கு முன்னர் வடக்கு மாகாண சபையில் யோசனை ஒன்றை ரவிகரன் முன்வைத்திருந்தார். பௌத்த பிக்குகள், பொலிஸார் இணைந்து மாயாபுர கிராமத்தில் சிங்கள மக்களை குடியேற்றி வருகின்றனர். இராணுவமும் இதற்கு உதவி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

    குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே 7 ஆயிரம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான நிலையில், தெற்கில் இருந்து சிங்கள குடும்பங்களை அழைத்து வந்து குடியேற்றுவது அநீதியானது எனவும் ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728