மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராகுங்கள் – சஜித்திடம் ரணில் தெரிவிப்பு


ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராக இருக்குமாறு, அதன் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய செயற்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தின் பின்னர் சஜித்திடம் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சஜித், கட்சியில் ஏகமனதாக எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...