Mar 12, 2018

சிங்கள இலக்கியம் மூலம் சமய சமூகப் பணி புரியும் சகோதரி ஸெனீபா


சத்தார்
பிர­பல சிறு­கதை, நாவல் இலக்­கிய எழுத்­தா­ள­ரான ஸெனீபா ஸனீர் தேசிய சர்­வ­தேச  விரு­துகள் பெற்ற ஒரு படைப்­பி­லக்­கிய கர்த்­தா­வாகக் திகழ்­கிறார். சிங்­களம்  மற்றும் ஆங்­கில மொழி­களில் ஆக்க இலக்­கி­யங்கள் படைத்து வரும் இவர், எந்­த­வொரு சம்­ப­வத்­துக்கும்  புது­மெ­ரு­கேற்றி, அதற்கு  இஸ்­லா­மியப்  கோட்­பா­டு­க­ளையும் புகுத்தி சுவை­பட வாச­கர்­க­ளுக்கு  வழங்­கு­வதில் வல்­லவர்.  இவ­ரது மொழி வளத்தால்  வாச­கர்கள் கவர்ந்து ஈர்க்­கப்­ப­டு­கி­றார்கள். சிங்­கள மொழி  ஊடாக இஸ்­லா­மியப் படைப்­பி­லக்­கி­யங்­களை  உரு­வாக்­கு­வதில் தன்னை அர்ப்­ப­ணித்து வரு­கிறார்.  மிகவும் அப­ரி­மி­த­மான பொறுப்­பு­ணர்­வுடன்  சிர­மங்­க­ளையும்  பொருட்­ப­டுத்திக் கொண்டு, இஸ்­லா­மிய விழு­மி­யங்­களைப் பிர­தி­ப­லிக்கும் நாவல், சிறு கதை­களை ஊட­கங்கள் ஊடாக  சிங்­கள வாச­கர்­க­ளுக்கு வழங்கி வரு­கிறார். இவ­ருடன் சிங்­கள மொழியில் மேற்­கொள்­ளப்­பட்ட செவ்­வியின் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கி­றது. 
கே: நீங்கள் ஓர் எழுத்­தாளர் என்ற வகையில், இஸ்­லா­மிய இலக்­கியம் தொடர்­பாக அதிக கரி­சனை காட்­டி­வ­ரு­வதன் பின்­னணி என்ன?
சிறு பரா­யத்­தி­லி­ருந்தே எனக்கு எழுத்­தார்வம் இருந்து வந்­துள்­ளது. எனது 16 ஆவது வய­திலே  முத­லா­வது நாவலை வெளிக்­கொ­ணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்­றாக  நான்கு நாவல்­களை  எழு­தி­யுள்ளேன். அவை­யெல்லாம் சிறு­பிள்ளை  விளைத்த  வேளாண்­மை­யா­கவே இப்­போது நான் கரு­து­கிறேன். தொடர்ந்து  நூல்கள் வாசிப்­பதன் மூலம்  என்னை வளர்த்துக் கொண்டேன். ஆனால் எனது  இளமைக் காலங்­களில் வாசித்த எந்­த­வொரு  நூலி­லா­வது முஸ்லிம் சான்­றுகள் எத­னையும் கண்டு  கொள்ள முடி­ய­வில்லை. சற்று வய­தே­றிய பின்­னர்தான்  முஸ்லிம் நாடு­களில் பெரும் பர­ப­ரப்பை  ஏற்­ப­டுத்­திய நூல்­களை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்­தது. 
சிங்­கள மொழி வாச­கர்கள் மத்­தி­யிலே இத்­த­கைய நூல்கள்  பிர­பல்யம் பெற்­றி­ருந்­தன. முஸ்­லி­மல்­லாத  எனது தோழிகள் மேற்­படி  நூல்­களைக் கொண்டு வந்து என்­னிடம் கருத்­து­களைக் கேட்கத்  தலைப்­பட்­டனர்.  நான் முஸ்லிம்  பாட­சா­லையில் கற்­ற­போ­திலும்   இஸ்லாம் சமயம் குறித்த போதிய சிந்­தனை என்­னிடம் இருக்­க­வில்லை. பிர­போ­தய மாதாந்த சஞ்­சி­கையைப் படித்­ததன் மூலம் சில விட­யங்கள் குறித்து தெளிவைப்  பெற்றுக் கொண்டேன்.  பரீட்­சையில் தேர்ச்சி பெறு­வ­தற்கே சமய அறி­வு­களைத் திரட்டிப் பெற்றுக் கொண்டேன்.  இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி­யென்ற தெளிவு அப்­போது என் மனதில் தோன்­ற­வில்லை. 
பெண் மஹ்­மூ­தியின் ‘தெவி­யன்கே அட­ய­விய’  (Not without my daughter)  ‘காந்­தா­ரயே குசும’  (Desert flower) ஆகிய நூல்­களைப் படித்த பின்னர், அவை ஒரு­வரின்   அனு­ப­வத்தின் வெளிப்­பாடு அல்­லது சமூ­க­மொன்றின் சடங்கு, சம்­பி­ர­தாயம் அன்றி,  இஸ்­லா­மிய  சட்ட திட்­டங்கள்  அல்ல என்ற எண்­ணமே என் மனதில்  தோன்­றின. பரப்­பப்­பட்டு வரும் இந்த தவ­றான கருத்தை இல்­லாமல் செய்ய வேண்டும்  என்று   எண்­ண­லானேன். எனக்கு குறிப்­பிட்­ட­ளவு அறிவு இருந்­த­தனால் அவ்­வாறு  கால் பதிக்­கவும் விரும்­ப­வில்லை. நூலாக்கம் செய்­வதில் உண்­மை­யி­லேயே அச்ச உணர்வே ஏற்­பட்­டது.
இஸ்லாம் சம்­பந்­தப்­பட்ட முஸ்­லிம்­க­ளது நல்ல பழக்க   வழக்­கங்கள் அடங்­கிய நூலொன்றை யாரா­வது  எழு­து­வார்கள் என்றே நான் நினைத்தேன். அதனால்  அதனைப் பற்றி நான் எழு­த­வில்லை. அத்­துடன் பிற சமூகம் குறித்து எழுதும் போது தன்­னை­ய­றி­யா­மலே  தவ­றுகள் நிகழ இட­முண்டு. எம்மால் எழு­தப்­படும்  அனைத்து விட­யங்­க­ளுக்கும் இந்த உல­கத்­திலும்  மறு­மை­யிலும் பதில் சொல்­லி­யாக வேண்டும் என்ற அச்சம் எனக்­கி­ருந்­தது. இத்­த­கைய கார­ணங்­க­ளினால் நான் எழுத்­து­ல­கி­லி­ருந்து சில வரு­டங்கள் தூர­மா­கி­யே­யி­ருந்தேன்.  

கே:ஆன்­மீகப் பண்பை வளர்க்கும்  வகையில் தானே மீண்டும் இலக்­கிய  உலகில் கால் பதித்­தீர்கள்? 
ஆம் அப்­ப­டித்தான். ஆன்­மீ­கத்தை மைய­மாக  வைத்தே  இலக்­கியம் படைக்­க­லானேன். எந்த ஊர், பெய­ரையும் பயன்­ப­டுத்­தாது பிறந்த குழந்­தை­யொன்று   தன் கண்­களால் உல­கத்தைப் பார்ப்­பது போன்ற  உணர்வை வெளிப்­ப­டுத்தும் விதத்தில் நூலை  எழு­தினேன்.  உலகம்  தானாக உரு­வா­க­வில்லை என்ற கருத்தை அதில் பிர­தி­ப­லிக்கச் செய்தேன். பின்னர் 2007 ஆம் ஆண்டில் இஸ்­லாத்தின்  சிறப்­பு­களை  வெளிக்­கொ­ண­ரக்­கூ­டிய  படைப்­பு­களை ஆக்க வேண்டும் என்ற உணர்வு துளிர்­விட்­டது. 
இந்த கால­கட்­டத்­தில்தான் நிம்­ம­தி­யாக எழுத ஆரம்­பித்தேன். பாசம் நிறைந்த முஸ்லிம்  குடும்பக் கதை­யொன்றை இல­கு­வான  நடையில் சிங்­கள  வாக­சர்­க­ளுக்கு வழங்­கினேன். இது இஸ்­லா­மிய இலக்­கி­யத்­திற்கு ஒரு பங்­க­ளிப்­பாக அமைந்­தது.  நாவல்கள் மூலம்  இஸ்­லாத்தை தெளி­வு­ப­டுத்­தவும்  இது­வொரு வாய்ப்­பாக அமைந்­தது. பெரும்­பா­லான புத்­த­கங்­களின் உள்­ள­டக்­கங்கள் வாசிக்­கக்­கூ­டி­ய­ன­வாக  இல்லை. நான் ஒரு புத்­தகப் பூச்­சி­யா­கவே இருந்தேன். ஆனால் ஒரு­சில புத்­த­கங்­களில் உள்ள விட­யங்கள் வாச­கர்­களின் மனதை பாதிக்கச் செய்­வ­ன­வாக உள்­ளன.  வாலிப உள்­ளங்­களில் திரு­ம­ணத்­திற்கு முன்னர் காதல் உணர்ச்­சி­களைத்  தூண்டக் கூடி­ய­ன­வாக விவ­ர­ணங்கள் ஆக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் மண­மு­டித்­ததன்  பின்­ன­ரான குடும்ப ஒற்­று­மைக்­கான  வழி­வ­கை­களை முன் வைப்­பது  மிகவும் குறை­வா­கவே உள்­ளன. 
பெரும்­பா­லான நூல்கள்  முறை­யற்ற விதத்தில் பாலியல்  உணர்வைத்  தூண்டும் வகையில்  நகர்த்திச் செல்­லப்­ப­டு­கின்­றன. நல்­வாழ்­வுக்­கான  தக­வல்கள்  பரி­மா­றப்­ப­டு­வதும் குறை­வா­கவே இடம்­பெ­று­கின்­றன.  எனவே இத்­த­கைய வாச­கங்­களைப் படிப்­பதில் நின்றும்  வாச­கர்­களைத் தடுக்கும் வகை­யி­லான  ரசனை  மிகு  ஆக்­கத்­தி­றமை எங்­க­ளிடம்  இருக்க வேண்டும். 
கே:உங்கள் ஆக்­கங்­க­ளி­னூ­டாக சிறந்த வாசகர்  வட்­ட­மொன்று உரு­வாக்கம் பெற்­றி­ருக்­கின்­றதா?  
உண்­மை­யி­லேயே எனது நூல்­களைப் படித்தோர்  மத்­தியில் சிந்­தனைத் தெளி­வொன்று உரு­வாக்கப்  பெற்­றி­ருப்­பதை என்னால் உணர முடி­கி­றது. ‘புதின்ன இட­தென்ன’ ஆன்­மீ­கத்­துக்கு வழி­வி­டுங்கள். நூல்   ஊடாக  பிறந்த குழந்­தைக்கும் வாழும் உரிமை உண்டு  என்ற தக­வலை சமூ­கத்­தின்முன் கொண்டு  சென்­றி­ருக்­கிறேன். இந்­நூலின் வாச­கர்கள் உள்­ளங்­களில் எனது கருத்­துகள்  தாக்கம் செலுத்­தி­யதைக்  கண்டேன்.
கருச் சிதைவு செய்­வது பாவ­மான காரியம்  என்­பதை ஏற்­றுக்­கொண்­டனர். இந்­நூலை வாசித்த தாதி­யொ­ருவர் யதார்த்த பூர்­வ­மான விட­யங்­களை இந்நூல் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கருச்­சி­தைவுப் பணி­களில் ஈடு­பட்ட  தனது அனு­பவ  உண்­மை­களை  முன்­னி­றுத்தி எனது நூலை அங்­கீ­க­ரித்தார். 
எனது மற்­றொரு படைப்­பான  ‘டியர் டயரி’  சிறு­க­தையை வாசித்த இந்­தி­யாவைச்  சேர்ந்த பொறி­யி­யல்­துறை மாணவர் ஒருவர், இக்­கதை மூலம் அவர் அடைந்த  மன­மாற்றம்  பற்றி நீண்ட கடி­த­மொன்றை எனக்கு அனுப்­பி­யி­ருந்தார். அவர் இக்­க­தையைப் படிக்கும் வரை முஸ்­லிம்­களின் வாழ்க்கை  முறை பற்றித் தெரி­யாத நிலையில் அதற்­கெ­தி­ரான  சிந்­த­னை­யுடன் இருந்­த­தா­கவும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருடன் வைராக்­கிய மனப்­பான்­மை­யு­டனே  காலம் கடத்­தி­ய­தா­கவும் தனது தவ­றான வழி­முறைக் குறித்து  கடி­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார். 
குறிப்­பிட்ட  எனது ஆக்கம்  தற்­செ­ய­லாக கிடைக்­கப்­பெற்று வாசித்­த­தா­கவும் வாசித்த பின்னர் அன்­றி­ரவு முழு­வதும் அழுது பிரா­யச்­சித்தம் தேடி­ய­தா­கவும் தனது உள்­ளக்­கி­டக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார். இப்­போது அவர் இஸ்­லா­மிய  நெறி முறைக்­கி­ணங்க  வாழ்­வ­தோடு,  அவ­ரது  குடும்ப வாழ்வும் மிகவும் திருப்­தி­யான முறையில்  நடந்­தே­று­வ­தா­கவும் தனது திருந்­திய  நிலைப்­பாட்­டையும்  குறிப்­பிட்­டி­ருந்தார்.
கதைக்­கெ­டுத்துக் கொள்ளும் கரு­மூலம்  வாச­கரின்  தவ­றான  எண்ணக்  கருக்­க­ளையே மாற்­றி­ய­மைக்க  முடியும். நூல்  வாசிப்­போ­ருக்கும்  வாசிக்­கா­தோ­ருக்கும்  இடையே பாரிய  ஏற்­றத்­தாழ்வு  காணப்­ப­டு­கி­றது.  நாவல்கள், சிறு­க­தைகள்  மூலம் மக்கள் வாழ்­விலே  மாற்றம் ஒன்றைக் கொண்­டு­வர முடியும் என்­பதே எனது  கருத்­தாகும். கதை­களின்  ரச­னை­யூ­டாக  மேலான  தகவல் ஒன்றை சமூ­கத்தின் மத்­தியில் கொண்டு செல்­வது மிகவும் இல­கு­வான காரி­ய­மாகும். 

கே: நீங்கள் வேலைப்­ப­ளு­வுக்கும்  கடும்  சிர­மங்­க­ளுக்கும்  மத்­தியில் இலக்­கியப் பணி­பு­ரிந்து வரு­கி­றீர்கள். இதன்­மூலம்  நீங்கள் திருப்தி அடை­கி­றீர்­களா? 
உண்­மை­யி­லேயே நான் மனத்­தி­ருப்­தி­ய­டை­கிறேன். என்னால் ஏதும் சிறி­ய­தொரு  பாடம் கற்­றுக்­கொள்ளக் கிடைத்­தாலும் அதனை தான் பெரிய ஒரு விட­ய­மா­கவே எண்ணி நிம்­ம­தி­ய­டை­கிறேன். இதுவும் ஒரு ஸத­கதுல் ஜாரி­யா­வென்­பதும் மற்­று­மொரு மகிழ்ச்­சியைத்  தரு­கி­றது. நான் மர­ணித்த பிறகும் கூட யாரும் எனது  நூலைப் படித்து அதன்­படி  நடப்­பார்­க­ளே­யானால் அவர் நன்­மைகள் பெறு­வ­தோடு எனக்கும்  நன்­மைகள் வந்து சேர்­வது உறுதி. இதனால் எமது எதிர்­கால சந்­த­தி­க­ளுக்­காக எனது எழுத்துப் பணியைத்  தொடர உள்ளேன். 
கே: முஸ்லிம் வாலிப, யுவ­திகள் இன்று வாசிப்பில் ஆர்வம் காட்­டு­வது குறைவு. இது எதிர்­கா­லத்தில்  எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று கரு­து­கி­றீர்கள்?
முகம்­மது  நபி (ஸல்)  அவர்­க­ளுக்கு முதன் முத­லாக அரு­ளப்­பட்ட வசனம், இக்ரஃ படிப்­பீ­ராக  என்­ப­தாகும். இத்­த­கைய வர­லாற்றுப் பின்­ன­ணியைக் கொண்­டுள்ள எமது சமூகம் வாசிப்பில் பின் நிற்­பது குறித்து மிகவும் வேத­னைப்­பட வேண்­டி­யி­ருக்­கி­றது. 
நாம் எவ்­வ­ளவு தூரம் வாசிக்­கி­றோமோ, அந்­த­ள­வுக்கு எமது அறிவு கூர்­மை­ய­டை­கி­றது. வாசிப்பின் போது எழும் பிரச்­சி­னைக்குத் தீர்வு தேட உந்­தப்­ப­டு­கிறோம்.  இத­னாலும் எமது அறிவு விருத்­தி­ய­டை­கி­றது.  இந்த நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட வர­லா­றுண்டு. ஆனால் இங்­குள்ள சகோ­தர  இனங்­க­ளுக்கு இஸ்­லா­மிய முறை­மைகள் பற்றி மிகவும்  சொற்ப அள­வுதான் தெரிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள்.  காரணம், எங்­க­ளு­டைய  வழி­மு­றை­க­ளை­யெல்லாம் நாம் எங்­க­ளு­டைய வீடு­க­ளுக்­குள்ளே கட்­டுப்­ப­டுத்தி  வைத்­தி­ருக்­கிறோம். நாம் ஏனை­ய­வர்­களைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்­சிப்­ப­து­மில்லை. 
எங்­களைப் பற்றி அறி­மு­கப்­ப­டுத்திக் கொள்­வ­து­மில்லை. இவ்­வா­றி­ருக்­கையில், இன  நல்­லி­ணக்கம் எவ்­வாறு  உரு­வாக முடி­கி­றது?  நவீன  தொழில்­நுட்­பத்தின்  வரவால் வாசிப்பு ரசனை குறைந்து விட்­ட­தாக ஒரு­சிலர் முணு­மு­ணுக்­கி­றார்கள். இது போலிச் சிந்­த­னை­யாகும்.  வாசிப்­ப­தற்கு முன்­பை­விட வசதி வாய்ப்­புகள்  அதி­க­ரித்­தி­ருப்­ப­தென்­பதே  உண்­மை­யாகும். இலத்­தி­ர­னியல் நூல்கள் இருக்­கின்­றன. குறிப்­பி­டத்­தக்­க­ளவு நூல்கள் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.  பல வர்­ணங்­களில் கவர்ச்­சி­க­ர­மான பத்­தி­ரிகை, சஞ்­சி­கைகள் அச்­சாகிக் கொண்­டுதான்  வரு­கின்­றன.  
தேவைப்­படும் பட்­சத்தில் கடலை விற்கும் பையனின் கரங்­க­ளிலும் நூல்கள், பத்­தி­ரிகை, சஞ்­சி­கைகள் இருப்­பதைக் காணலாம். வீடு­களில் தான் தவ­றுகள் நடக்­கின்­றன. சூழ­லுக்கு தீங்கு விளை­விக்­கின்ற பிளாஸ்ரிக் விளை­யாட்டுப் பொருட்­களை சிறு பிள்­ளை­க­ளுக்கு வாங்கிக் கொடுப்­பதை தவி­ருங்கள். அப் பணத்­திற்கு கண்ணைக் கவரும் கதைப் புத்­த­கங்கள், சிறு சஞ்­சி­கைகள், இப்­போது சர்வ சாதா­ர­ண­மாக சாலை­கள்­தோறும், பஸ், புகை­வண்­டி­களில் எல்லாம் விற்­கப்­ப­டு­கின்­றன. வாங்கிக் கொடுத்து வாசிப்­பு­ணர்வைத் தூண்டச் செய்­யுங்கள்.
பிள்­ளை­க­ளுக்கு ஏதும் அன்­ப­ளிப்புச் செய்­வ­தாயின் சிறு புத்­த­கங்­க­ளையே வாங்கிக் கொடுங்கள். சிறு பிள்­ளைகள் வாங்கிக் குறிப்­பிட்ட புத்­த­கங்­களை கிழித்தால் அல்­லது எழு­து­கோலால் கிறுக்கித் தள்­ளி­னாலும் அவர்­களைக் கண்­டிக்க வேண்டாம். அத்­த­கைய செயற்­பா­டு­களும் ஒரு­வகைப் பயிற்­சிதான். புத்­தி­யுள்ள வய­தை­ய­டைந்­ததும் அவர்கள் புத்­த­கங்­களைச் சேதப்­ப­டுத்­து­வதைத் தவிர்த்துக் கொள்­வார்கள்.   
கே:பாட­சாலை, பள்ளி, மத்­ரஸா மற்றும் இஸ்­லா­மிய நிலை­யங்­களில் எல்லாம் பிள்­ளை­களின் வாசிப்பை அதி­க­ரிக்கச்  கொள்­வ­தற்­காக என்ன செய்ய வேண்டும்?
மேற்­படி இடங்­களில் எல்லாம் ‘Book Reading Sessions’ ஏற்­ப­டுத்திக் கொள்­வது நல்­லது. நான் பிரிட்டிஷ் கவுன்­ஸிலில் சில காலம் பணி­யாற்­றி­ய­துண்டு. அங்கு வாரத்தில் ஒரு நாள், ஒரு மணி நேரம் ‘Read – Aloud’ என்ற வேலைத்­திட்டம் ஒன்று நடத்­தப்­பட்­டது. அத்­துடன் எழுத்­தா­ளர்கள் வர­ழைக்­கப்­பட்டு, பிள்­ளை­க­ளுக்கு கதை எழுதும் பயிற்சி வழங்­கப்­பட்­டது. 
இத்­த­கைய செயற்றிட்­டங்கள் மூலம் மேற்­படி துறைக்குப் பிள்­ளை­களை உரு­வாக்க முடியும். புத்­த­கங்கள் எப்­போதும் கிடைக்கக் கூடி­ய­வா­றான சூழல் ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். வாசி­க­சாலை மேல­தி­க­மாக ‘Reading Corner’ ஒன்றை நடாத்­தவும் முடியும். மாண­வர்­களால் இல­குவில் கிர­கித்துக் கொள்ளக் கூடிய நூல்­களை வாங்கிக் கொடுக் வேண்டும். மேல் நாட்டுக் குழந்­தை­க­ளுக்குப் பொருத்­த­மான நூல்கள் எங்கள் பிள்­ளை­க­ளுக்குப் பொருந்­தாது. அவர்­க­ளது கலா­சாரம், வாழ்க்கை வட்டம் வேறு. இங்­குள்ள பண்­பா­டுகள் வேறு. இத்­கைய நூல்கள் விட­யத்தில் பெற்­றோ­ருக்கு கவனம் தேவை. அத்­த­கைய நூல்­களை வாசிக்கும் பிள்­ளைகள் மாற்­ற­மா­ன­தொரு உல­கைத்தான் கண்டு கொள்­வார்கள்.
கே: நீங்கள் நவீன ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்தி வரு­கி­றீர்கள். இப்­புது ஊட­கங்­களை நல்ல முறையில் பயன்­ப­டுத்திக் கொள்­வது எப்­படி.
நான் அடிக்­கடி குறிப்­பிட்டு வரு­வது போன்று, Online, Offline என்று இரு வாழ்க்கை முறைகள் இருக்க முடி­யாது. எமது சொல், செயல்கள் அனைத்­துக்கும் நாம் பொறுப்புக் கூற வேண்டும். – சமூக வலைத்­த­ளங்கள் என்­பது பொழு­து­போக்­கு­வ­தற்­காகப் பாவிக்கக் கூடிய ஒரு ஊட­க­மன்று. அதன் மூலம் எமது முன்­னேற்­றங்­களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெளி­நாடு, தூர இடங்­க­ளி­லுள்ள எமது உற­வினர் நண்­பி­க­ளுடன் தொடர்­பு­களை வைத்துக் கொள்­ளவே நான் ஆரம்­பத்தில் சமூக வலைத்­த­ளங்­களில் ஈடு­பட்டேன். அதன் பிறகு படிப்­ப­டி­யாக எமது எழுத்­துத்­து­றையைப் புகுத்திக் கொண்டேன். 
அதன் ஊடக சர்­வ­தேச ஆண், பெண் எழுத்­தா­ளர்­க­ளு­ட­னான அறி­முகம் கிடைத்­தது. அவர்­களின் ஆற்­றல்­களைப் படித்துக் கொண்டேன்.  அவர்­க­ளி­ட­மி­ருந்து எழுத்­துத்­துறை நுணுக்­கங்­களைக் கற்றுக் கொண்டேன். எழுத்­து­லகப் பய­ணத்­துக்குத் தேவை­யான விட­யங்­களைப் பெற்று புடம் போட்டுக் கொண்டேன். எதனைச் செய்­யவும் அடுத்­தவர் சிந்­த­னையும் மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். நான் எனது நூல்கள், வெளி­யீ­டு­களைப் பதிப்­பித்தல், அச்­சிடல், அவற்றை விற்­பனை செய்தல் உள்­ளிட்ட எல்லா விட­யங்­க­ளையும் நவீன ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­தியே மேற்­கொண்டு வரு­கின்றேன். 
கே:எழுத்துப் பணியில் ஈடு­படும் நீங்கள் இளைஞர் விவ­காரம் மற்றும் பொது­நல சேவை­க­ளிலும் ஈடு­பாடு காட்டி வரு­கி­றீர்கள். இது­வரை நீங்கள் மேற்­கொண்ட பணிகள் குறித்து……?
2011 ஆம் ஆண்டு Li words எனும் முகநூல் பக்கம் ஒன்றை, பயிலும் எழுத்­தா­ளர்­க­ளுக்­காகத் திறந்து வைத்தேன். படிப்­ப­டி­யாக ஆண், பெண் எழுத்­தா­ளர்கள் அந்தப் பக்­கத்தில் எழுத ஆரம்­பித்­தனர்.
Spreading peace in a Creative way எனும் தொனிப்­பொ­ருளில் எங்கள் முகநூல் பக்­கத்தில் சமூ­கத்­துக்­கான போத­னை­களை வழங்க ஆரம்­பித்தேன். அதன் விளை­வாக இஸ்­லா­மிய கோணத்­தி­லி­ருந்து எழு­தப்­பட்ட நாவல்கள், சிறு­க­தைகள், கவி­தைகள், மொழி­பெ­யர்ப்­புகள், துணுக்­குகள், கட்­டு­ரைகள் என்­ப­வற்றால் அந்த முகநூல் பக்கம் நிரம்பி வழிய ஆரம்­பித்­தது. அதில் இடம்­பெற்ற பெரும்­பா­லான நாவல்கள் நன்கு ஜன­ரஞ்­ச­க­மா­கின. தீனிடேல்ஸ் இஸ்­லா­மிய கோணத்தில் மாற்றி எழு­தப்­பட்ட தேவதைக் கதைகள் நன்கு பிர­பல்­ய­மாகிப் பிர­கா­சித்­தன. 
எழுத்­து­லகப் பயிற்­சியில் எழுதிக் கொண்­டி­ருந்த இளம் வாலிபர், யுவ­திகள் தயக்கம், சந்­தே­கங்கள் இன்றி அவர்­க­ளது படைப்­பு­களைப் பகிர்ந்து கொண்­டனர். Edutaiment தரத்தில் வைத்து மதிக்­கப்­படும் அறி­வியல் சஞ்­சி­கைக்கு ஈடாக இஸ்­லாமிக் இன்ஸ்­ப­யரின்க் வேர்ட்ஸ் li words உம் ஏரா­ள­மா­ன­னோரை சென்­ற­டைந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
2016 ஆம் ஆண்டு மே மாதம் வெள்ள அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக நிதி­யு­தவி திரட்­டுட்டும் பணி­யனில் Li words, Islamic Student movement (SLISM) உடன் Launch Good என்ற பெயரில் Fundraising இணை­யத்­த­ளத்­துடன் இணைந்து நிதி சேக­ரிப்பில் ஈடு­பட்­டது. அதில் 8150 டொலர்கள் அள­வி­லான நிதி வந்­த­டை­கி­றது. அப்­பணம் SLISM ஊடாக 300 க்கும் மேற்­பட்ட மாண­வர்­க­ளுக்கு பாட­சாலை உப­க­ர­ணங்கள் வழங்­கப்­பட்­டன.
இப்­ப­ணி­க­ளுக்கு புறம்­பாக நவீன ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வதில் எழுத்­து­லகப் பணியில் ஈடு­படும் முறை­மைகள் குறித்த பயிற்சி ஆலோ­ச­னை­களை இளம் சந்­த­தி­யி­ன­ருக்கு வழங்கும் வேலைத்­திட்­டங்கள், செய­ல­மர்­வுகள், கலந்­து­ரை­யா­டல்கள், நடத்­தியும் வரு­கிறோம். பாட­சா­லை­களில் Reading Sessions என்­ப­னவும் நடாத்தி வரு­கிறோம். 
கே: உங்கள் பணி­க­ளுக்­காக இது­வரை நீங்கள் பெற்றுக் கொண்ட விரு­துகள் குறித்து…..?
அச்­சிட்ட நூல்­களை விட அச்­சு­வா­கனம் ஏறாத ஆக்­கங்கள் ஏராளம். அவையாவும் பிரசுரம் காண எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இதுவரையில் வெளிவந்துள்ள நூல்களாவன: புதின்ன இடதென்ன, செனஹஸே ரித்மய, Li – Inscribed (Anthology of li words) Nothing but love, A Heartless summer (E book short story), I' m fasting this Ramadan! (Children’s Picture book) 
Autumn Leaves படைப்புக்கு 2012 ஆம் ஆண்டு போட்டிக்கு வந்த 10,000 ஆக்கங்களில் 2,000 க்குள் தெரிவானது. 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா நடாத்திய தேர்வில் எனது சிறுகதை முதலிடத்தைப் பெற்றது. இப்படிப் பல விருதுகள், பரிசில்கள் கிடைத்துள்ளன. 
கே: இறுதியாக உங்களைப் பற்றி சிறிய அறிமுகம் தாருங்கள்?
பதில்: சிறு வயதிலிருந்தே எனக்கு எழுத்து ஆர்வம் இருந்து வந்தது. இப்போது நான் மூன்று பிள்ளைகளின் தாய். எனது எழுத்துத் துறைக்கு எனது தாய் தான் அடித்தளம் இட்டார். எனது தந்தையும் அதற்கு உறுதுணையாக அமைந்தார். திருமணத்தின் பின்னர் எனது கணவரின் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கதாகும். எனது குடும்பத்தினர், தோழர், தோழிகள் தரும் ஊக்குவிப்பும் சொல்லும் தரமன்று. 
எழுத்துத் துறையில் உயர்ந்து நிற்கும் நான் ஒரு சாதாரண குடும்பப் பெண்தான். எனது சமூகம் குறித்து பொறுப்புணர்வு எப்போதும் என் மனதில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. எனது உள்ளத்தால் மட்டுமன்றி எனது அறிவிலாலும் சமூகத்துக்கு ஏதும் நற்பணிபுரிய வேண்டும் என்ற ஆவல் எனக்கிருக்கிறது. இப்பூமியில் பிறந்த எங்கள் அனைவருக்கும் இவ்வுலகின் முன்னேற்றம் குறித்து உழைக்க வேண்டிய கடப்பாடுள்ளது. அந்த வகையிலே எதிர்காலத்திலும் நான் மேற்கொண்டுவரும் பணியைத் தொடர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.   

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network