ஐ.தே.க. வெற்றிபெற்ற நீர்கொழும்பு, கட்டான உள்ளூராட்சி மன்றங்கள் மஹிந்த வசம்!( ஐ. ஏ. காதிர் கான் )

   கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்ற நீர்கொழும்பு மா நகர சபை மற்றும் கட்டான பிரதேச சபை ஆகியவற்றின் ஆட்சி அதிகாரங்களை, பொதுஜன பெரமுன தன் வசமாக்கிக் கொண்டுள்ளது. 
   இதேவேளை, பொதுஜன பெரமுன வெற்றிபெற்ற கட்டுநாயக்க - சீதுவ நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை,  ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில்,  மினுவாங்கொடை நகர சபையின் நிர்வாகத்தை பொதுஜன பெரமுன தனதாக்கிக் கொண்டுள்ளது. 

   இதன்பிரகாரம், நீர்கொழும்பு மா நகர சபையின் நகர பிதாவாக, தயான் லான்சா (பொதுஜன பெரமுன) நியமனம் பெற்றுள்ள நிலையில், பிரதி நகர பிதாவாக முஹம்மது பரீஸ் (ஸ்ரீல.சு.க.) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மினுவாங்கொடை நகர சபையின் தலைவராக நீல் ஜயசேகர (பொதுஜன பெரமுன),  கட்டுநாயக்க - சீதுவ நகர சபையின் தலைவராக சரத் பீரிஸ் (ஐ.தே.க.), கட்டான பிரதேச சபையின் தலைவராக விஜேரத்ன சில்வா (பொதுஜன பெரமுன) ஆகியோர் தெரிவாகியுள்ளனர். 

   நீர்கொழும்பு மா நகர சபை,  மினுவாங்கொடை மற்றும் கட்டுநாயக்க - சீதுவ நகர சபைகள்,  கட்டான பிரதேச சபை ஆகியவற்றிற்கான முதலாவது சபை அமர்வுகள் (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வெற்றிபெற்ற பிரதான மற்றும் சுயாதீனக் கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் விடப்பட்ட வாக்களிப்பின் பிரகாரமே, நகர பிதா, பிரதி நகர பிதா, தலைவர் மற்றும் பிரதித் தலைவர்கள் தெரிவு இடம்பெற்றதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்