தீயாய் பரவும் இந்த வதந்தியை நம்பாதீர்கள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

தீயாய் பரவும் இந்த வதந்தியை நம்பாதீர்கள்!

Share Thisசிரியா நாட்டு அகதிகளை கனடா பிரதமர் தனது நாட்டுக்கு அழைத்து வந்தாரா?

25000 சிரியா நாட்டு அகதிகளை கனடா நாட்டு பிரதமர் தனது நாட்டுக்கு அழைத்து வந்தார் எனும் செய்தி கடந்த சில நாட்களாக முகநூலில் தீ போன்று பரவி வருகிறது.

பலர் இந்தச் செய்தியை உண்மை என்று நினைத்து  தங்களது முகநூலில் பதிவு செய்து கனடா நாட்டுக்கும் அந்நாட்டு பிரதமருக்கும் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்தச் செய்தியானது கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெற்ற ஒரு சம்பவமாகும்.

2015ம் ஆண்டு சிரியாவில் அந்நாட்டு அரசால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது  பெண்கள், சிறுகுழந்தைகள் என பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை இழந்து நின்ற போது கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது நாட்டுக்கு அழைத்து வந்தார் அப்போது இணையத்தளங்களில் வெளியாகிய செய்தியே இப்போது முகநூலில் பரவிக்கொண்டிருக்கிறது.

இதற்கான அதாரங்கள் புகைப்படத்தில் அடையாளம் இட்டுக் காட்டப்பட்டுள்ளது

தயவுசெய்து முகநூலில் வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அதனை பரப்புவதை தவிர்த்துக்கொள்ளவும்.

-எம்.ஐ.அஸ்பாக்-

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE