சமூக வலைத்தளங்கள் முடக்கம் - இளைஞர், யுவதிகளுக்கு மனதளவில் பாதிப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

சமூக வலைத்தளங்கள் முடக்கம் - இளைஞர், யுவதிகளுக்கு மனதளவில் பாதிப்பு!

Share This


இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் இளைஞர், யுவதிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் அதன் மீது நாட்டம் கொண்டவர்கள் இலகுவாக மனரீதியாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர், யுவதிகளின் மனங்களில் பதற்றமான மற்றும் குழப்பமான நிலை இலகுவில் ஏற்படும் என காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட உளவியல் வைத்தியர் ரூபன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் இன்மையால் இதற்கு முன்னர் காணப்பட்ட மகிழ்ச்சி மற்றும் அவர்களின் சுய செயற்பாட்டு திறன் இழக்கப்படும். ஆளுமை, குடும்பம், சமூகம் மற்றும் சமூக உறவுகளில் சில முறிவுகளை ஏற்படுத்துவதனை காண முடியும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் அவதானத்துடன் அவர்களை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கிற்கு அடிமை ஆவதென்பது மனிதர்கள் அடிமையாகும் விடயங்களில் இணைந்த புதியதொன்றாகும். அவ்வாறு அடிமையாகுவது மனிதர்களின் சுகாதாரம் தொடர்பில் சிறப்பானது அல்ல.

இதனால் அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்கு பல்வேறு மகிழ்ச்சியான விடயங்களுக்குள் பிள்ளைகளை பழக்கப்படுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த அடிமைத்தனம் மனநோய் வரை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விசேட உளவியல் வைத்தியர்
 ரூபன்

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE