மாகாண சபைத் தேர்தல் இந்த முறையில்தான் நடத்தப்பட வேண்டும்.!மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசார தேர்தல் முறையில் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி, முடிவடைந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பணத்துக்காக கொள்கைகளை மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினார். 
தேர்தல் காலங்களில் இணைந்து செயற்பட்ட கட்சிகள் உள்ளூர் சபைகளை இணைந்து நிறுவுவதில் இணக்கத்தை காட்ட மறுத்துள்ளன. முக்கியமாக கட்சிகள் பணத்துக்காக தனது கொள்கைகளை மாற்றக்கூடிய சூழ்நிலை எழுந்துள்ளது. மில்லியன் கணக்கான தொகை பணம் இதற்கென செலவிடப்படுவதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(நா.தினுஷா)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...