செஸ்டோ அமைப்பின் மாபெரும் இரத்ததான முகாம்!!


எம்.வை.அமீர் -
பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடராகச் செய்துவரும் செஸ்டோ அமைப்பு, 2018-03-25 ஆம் திகதி தலைவர் ஏ.எச்.எம்.றிஷான் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நடாத்தியது.
இது கல்முனை சாஹிராக் கல்லூரியில் 99 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்களை உள்ளடக்கிய  செஸ்டோ” ZESDO (Zairians’  Education & Social Development Organization) என்ற பெயரில் பிரதேசத்தின் பிரபல்யமான அமைப்பாகும்.
இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர்களான எம்.ரீ.என்.சிபாயா மற்றும் கே.வித்யா ஆகியோரது மேற்பார்வையில் இடம்பெற்ற குறித்த முகாமில்  "செஸ்டோ" அமைப்பின் நடப்பாண்டு செயலாளர் எம்.ஏ.எம்.எம்.சிராஜ், பொருளாளர் எஸ்.எச்.எம்.அஸ்மி, அமைப்பில் உறுப்பினரும் கல்முனை மாநகரசபையின் உறுப்பினருமான என்.எம்.றிஸ்மிர் மற்றும் எம்.சி.எம்.கமருன் ரிலாஏ.எச்.எம்.நளீம் ,ஆரிஸ் அக்பர்ஏ.எம்.எம்.றிபாஸ், ஏ.எம்.றாஜுடீன், ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்களும் நல்லுள்ளம் கொண்ட அநேக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்தனர்.
"செஸ்டோ" அமைப்பானது 2013 ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டுஅது சமூக ரீதியான குறிக்கோள்களை மையமாக கொண்டு தூர நோக்கு சிந்தனையுடன்சமூகத்தின் கல்விகலைகலாசார அபிவிருத்தியில் முடியுமான அளவில் பங்களிப்பு செய்து இயங்கிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...