பாரிய அசம்பாவிதங்கள் எவையும் நடைபெறாமல் பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

பாரிய அசம்பாவிதங்கள் எவையும் நடைபெறாமல் பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்!

Share This


முஸ்லிம் வாலிபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த வாலிபவர் ஒருவர் உயிர் இழந்துள்ளதால் அவரது பூதவுடல் தகனம்  செய்யும் வரையிலும் தற்போது முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக் கருத்திற் கொண்டு திகன , கெங்கல்ல, உன்னஸ்கிரிய  பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கண்டி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த ஏக்கநாயக்க விடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம. .எச். ஏ. ஹலீம்  தெரிவித்தார்.

அவர் தொடர்ந் கருத்துத் தெரிவிக்கையில்,

வாகனம் ஒன்று ரிவேஸ் பண்ணும் போது முச்சக்கர வண்டியில் பட்டு   சைட் கண்ணாடி உடைந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பினால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த  வாலிபவனின் சம்பவத்தைத் தொடர்ந்து தெல்தெனிய மெதமஹநுவர, திகன. உடிஸ்பத்துவ, கெங்கல்ல பிரதேசங்களில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு கண்டி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த ஏக்கநாயக்க விடம் முஸ்லிம் பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டிக் கொண்;டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தச் சபம்வத்தைப் பயன்படுத்தி இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர் குலைக்க சிலர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சமதானத்துடன் முடிவடைந்த பிரச்சினையை மேலும் இனவாத ரீதியாகவும் அரசியலாகவும் முன்னெடுக்க சில தீய சக்திகள் முற்பட்டு வருகின்றனர். இன மதம் பாராமல் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பாரிய அசம்பாவிதங்கள் எவையும் நடைபெறாமல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துள்ளப்படடுள்ளார்கள். எனினும் சில அசம்பாவிதங்கள் நடைபெற்ற போதிலும் பதற்றத்தை உருவாக்க முனைந்தார்கள் என்ற   குற்றச் சாட்டின் பேரில் 11  சந்தேக நபர்களுடன்  இரு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பால என்ற இடத்தில் இருந்து திகன நகர் வரையிலும் பூதவுடலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் நகருக்கு கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப் போதில்லை என்று பிரதிப் பொலிஸ் மாஅதிபர் உறுதியளித்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் பொறுமையுடனும் புத்திசாரியமாகவும் நடந்த கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலிPost Bottom Ad

PLACE YOUR ADVERT HERE