அல்குர்ஆன் எரித்தும் துாங்கிக்கொண்டிருக்கும் உலமா சபையும் சூறாசபையும்!அம்பாறை பள்ளிவாசலில் அல்குர்ஆன் எரிக்கப்பட்டது, பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டது, உடமைகள் பாழாக்கப்பட்டது ஆனால் எந்தவித எதிர் செயற்பாடுகளும் இன்றி ஏதோ துாக்கத்தில் இருப்பது போது இலங்கையின் முஸ்லிம் அமைப்புகள் இருப்பதை காணமுடிகிறது,

சிங்கள தேசியத்திடமும், விகாரைகளின் பீடாதிபதிகளிடமும் நாம் சொல்ல வேண்டிய நற்செய்திகள் பலவிருக்கிறது, கிழக்கில் யுத்தம் தாண்டவம் ஆடிய பொழுது சிங்கள மக்களை காத்தவர்கள் முஸ்லிம்கள் அத்தோடு இராணுவத்திற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள், இன நல்லுறவை வளர்க்க பாடுபட்டவர்கள் முஸ்லிம் குறிப்பாக அம்பாறை மாவட்டம் இதனை சிங்கள தேசிய உயர்பீடங்களுக்கும், மல்வத்து பீடம் அஸ்கிரிய பீடம், பொதுபலசேனா உட்பட ஏனைய அமைப்புகளுக்கு அவர்களின் மொழிமூலம் சொல்ல வேண்டிய தேவையிருக்கிறது.

அம்பாறை நகரத்திற்கு முஸ்லிம்கள் செல்வது அச்சமாக உள்ளது, முன்னரை போல இப்போது அவர்களுடன் சகஜமாக பழக முடியாது உடனடியா அம்பாறை - தீகவாபி விகாராதிபதிகளுடன் சந்திப்புக்களை செய்து இனவாத குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவற்றை ஜம்மியதுல் உலமா செய்ய வேண்டும்
அல்குர்ஆன் எரித்தும் துாங்கிக்கொண்டிருக்கும் உலமா சபையும் சூறாசபையும்! அல்குர்ஆன் எரித்தும் துாங்கிக்கொண்டிருக்கும் உலமா சபையும் சூறாசபையும்! Reviewed by NEWS on March 03, 2018 Rating: 5