அம்பாறையில் மீண்டும் பதற்றம்!அம்பாறையில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தி, அம்பாறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த சிங்களத் தரப்பினரே இதில் பங்கேற்றுள்ளனர். இதனை அம்மாவட்ட அரசியல்வாதி ஒருவர் உறுதிப்படுத்தினார். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றநிலை உருவாகியுள்ளது.

அம்பாறை பொலிஸ் நிலையத்தை சுற்றி தற்போது பல நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறையில் மீண்டும் பதற்றம்! அம்பாறையில் மீண்டும் பதற்றம்! Reviewed by NEWS on March 01, 2018 Rating: 5