Mar 30, 2018

மாளிகாவத்தையில் நிப்ராஸ் படுகொலை, கொலை தொடர்பில் வெளியாகும் தகவல்கள்!




மாளிகாவத்தை அல்லாமா இக்பால் மாவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்ட 31 வயதுடைய நிப்பு என அறி யப்படும் சாஹுல் ஹமீட் மொஹம்மட் நிப்ராஸின் கொலை தொடர்பில் பல் வேறு தகவல்கள் விசாரணைகளில் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

அதன்படி இந்த கொலையானது டுபாயில் இருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளமைக்கான தகவல்களை விசாரணையாளர்கள் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நிப்புவுக்கு இறுதியாக டுபாயிலிருந்து வந்துள்ள தொலைபேசி அழைப்பின் இலக்கம் ஊடாக முன்னெடுக் கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


அச்சுறுத்தல்கள் காரணமாக நிப்பு, மாளிகாவத்தையை விட்டு வெளியேறி வரகாபொலை பகுதியில் இருந்தவாறு அவ்வப்போது மாளிகாவத்தைக்கு வந்து போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் பொலிஸார்,

கொலை இடம்பெற்ற தினம் டுபாயில் இருந்து பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான கஞ்சிப்பான இப்ராஹீம் என்பவரே நிப்புவுக்கு அழைப்பை ஏற்ப டுத்தியுள்ளதாகவும் அவரின் அழைப்பின் பிரகாரமே முச்சக்கர வண்டியில் வரகா பொலையில் இருந்து அவர் மாளிகாவத்தைக்கு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே மாளிகாவத்தையில் வைத்து அவர் கொல்லப்பட்டுள்ளார்.

கஞ்சிப்பான இப்ராஹீம் தற்போது டுபாயில் உள்ள நிலையில், டுபாயில் இருந்து இத்தாலி சென்றுள்ள மாகந் துரே மதூஷின் நெருங்கிய சகாவே இவர் என பொலிஸார் கூறும் நிலையில், வாழைத்தோட்டம் பகுதிதியில் வர்த்தகர் றிஸ்வானின் கொலைக்கும், நிப்புவின் கொலைக்கும் தொடர்புகள் இருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.

இந் நிலையில் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் குறித்து கொழும்பு மத்தி பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணா மல்தென்பியவின் கீழும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்சாவின் கீழும் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

மாளிகாவத்தை அல்லாமா இக்பால் மாவத்தையில் கடந்த செவ்வாயன்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


நிப்பு எனப்படும் குறித்த இளைஞர் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு முச்சக்கர வண்டியிலேயே வந்துள்ள நிலையில், அவர் திட்டமிட்டு அவ்விடத்துக்கு வரவழைக் கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


அதன்படி முன்னெடுக்கப் பட்ட மேலதிக விசாரணை களில் அவ்விடயம் உண்மை யெனக் கண்டறியப்பட்டது. நிப்புவுடன் முச்சக்கர வண் டியில், சிராஜ் எனும் மற் றொரு இளைஞரும் வந்துள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் அவர் சிறு காயத்துடன் தப்பியிருந்தார்.

அவரை தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசா ரித்து வருகிறது. .இவ்வாறு கொல்லப் பட்ட நிப்பு, இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் வெள்ளை வேனில் நுவரெலியாவில் வைத்து கடத்தப்பட்ட மஞ்சன் அக்ரம் எனப்படும் பாதாள உலக உறுப்பினரின் மனைவியின் சகோதரன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையிலேயே சந்தேக நபர்களைக் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network