இவ்வருடம் நடைபெறவுள்ள மாணவர்களுக்கான பொதுப் பரீட்சை திகதிகளில் மாற்றங்களை பரீட்சை திணைக்களம் செய்துள்ளது. கா.பொ.த  சா/த மற்றும் தரம் 5 தர புலமை பரிசில் பரீட்சைத் திகதிகளில்  சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை வழமையாக ஆகஸ்ட  மாதம் 25 அல்லது 26 ஆம் திகதிகளில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் கா.பொ.த உ / த பரீட்சையில் நடுப்பகுதியில் இப்பரீட்சை நடைபெறுவது வழக்கம். இம்முறை கா.பொ.த உ/த பரீட்சை முன்னதாகவே ஆகஸ்ட் 05 ஆம் திகதி புலமை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன்கா.பொ.த  சா/த பரீட்சை வழக்கமாக டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் அதாவது டிசம்பர் 10 அலல்து 11 ஆம் திகதிகளில் தொடங்கும் ஆனால் இம்முறை டிசம்பர் 03 ஆம் திகதி முதல் வாரத்திலேயே இப்பரீட்சை ஆரம்பமாகின்றது.

அனைத்து பாடசலைகளுக்குமான மூன்றாம் தவணை விடு முறை டிசம்பர்7 ஆம் திகதியே திட்டமிடப்பட்டு இருந்தது தற்போது இந்த விடுமுறை நவம்பர் மாதம் 30 ஆம் திகதியாக மாற்றப்பட்டு03 ஆம் திகதி க.பொ.த சா/த பரீட்சை ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் கா.பொ.த உ/த ப் பரீட்சை திகதி மாற்றப்படாது அது ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி  தொடங்கி செப்டம்பர் 01 ஆம் திகதி வரை நடைபெறும் செய்முறைப்ரீட்சைகள் அக்டோபர் 01 ஆம் திகதி தொடங்கி 10 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சை திணைக்களம் அரிவித்துள்ளது

எம் நுஸ்ஸாக்
இரத்தினபுரி

Share The News

Post A Comment: