தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 27, 2018

பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை!அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு வர்த்தக அமைப்பு 7 பாகிஸ்தான்  நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் நட்பு நாடாக  பாகிஸ்தான் உள்ள போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதுடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவுகரம் நீட்டி வருகிறது என அமெரிக்கா கடந்த சில மாதங்களாக குற்றஞ் சாட்டி வருகிறது.
இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த 2 பில்லியன் டொலர்  நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்திவிட்டதோடு பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியது.
இதன் காரணமாக சமீபகாலமாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந் நிலையில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த 7 நிறுவனங்கள் அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அமெரிக்காவுக்கு சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு வர்த்தக அமைப்பு குறித்த  7 நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதித்தது.
அமெரிக்காவின் இந் நடவடிக்கை அணுசக்தி விநியோக குழுவில் உறுப்பினராக வேண்டும் என போராடிக்கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு  பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச அரங்கில் பேசப்படுகிறது.

Post Top Ad

Your Ad Spot

Pages