வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள் ஆரம்பமாகியுள்ளது! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள் ஆரம்பமாகியுள்ளது!

Share This


தொல்பொருள் பெறுமதிமிக்க பழமை வாய்ந்த சிற்பங்கள், கட்டடங்களை அடையாளம் காண்பதற்காக மாவட்ட மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவள தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இவ்வாறானவற்றை அடையாளம் கண்டறிவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 1818ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் திகதிக்கு முன்னரான தொல்பொருள் சட்டத்திற்கு அமைவாக அடையாளம் காணப்பட்டுள்ள தொல்பொருள் பெறுமதி கொண்ட இவ்வாறானவை தொல்பொருள் பொருட்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றது என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.

ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் தொல்பொருள் 100 வருடங்களையும் பார்க்க பழமைவானதாக கருதப்படும் பட்சத்தில் அவற்றை தொல்பொருள் திணைக்களம் வர்த்தமானியின் மூலம் அறிவிக்கும். இதற்காக பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்புடன் நில அளவையாளர் திணைக்களம் நில அளவைகளை மேற்கொள்ளும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு குறிப்பிட்ட காலம் செல்லும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் இவ்வாறான தொல்பொருள் பெறுமதிமிக்க சிற்பங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை சுமார் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்பொழுது திணைக்களத்தினால் இவ்வாறானவை சுமாவர் மூவாயிரத்து 500 பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE