தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 26, 2018

யாழில் முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல்யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதி, முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது (25.03.2018) இரவு 7.30 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் கடைபெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட குரோதமே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post Top Ad

Your Ad Spot

Pages