தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 7, 2018

காத்தான்குடியில் குண்டுகளும், ISIS ஸ்ரீ லங்கா என எழுதப்பட்ட பதாதையும் மீட்புமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் இரண்டு வெடிகுண்டுகள், இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளிலேயே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர்கள், காலை எழும்பி வெளியில் வந்து பார்த்த போது, வீட்டுக்கு முன்பாக குண்டுகள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த குண்டுகள் காணப்பட்ட வீடுகளுக்கு முன்னால், “ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸ்ரீ லங்கா” என எழுதப்பட்ட பதாதையும் தொங்கவிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post Top Ad

Your Ad Spot

Pages