16 பேரும் அரசாங்கத்திலிருந்து சென்றமையினால் அரசாங்கம் சுத்தமடைந்துள்ளது

Image result for நளின் பண்டார

பெரும் மழை பெய்து தாய் நாட்டின் மேனியிலுள்ள அழுக்குகளை அடித்துச் செல்வது போன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 16 பேரும் அரசாங்கத்திலிருந்து சென்றமையினால் அரசாங்கம் சுத்தமடைவதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இவர்கள் வெளியேறியதனால் அரசாங்கத்திற்கு புற்றுநோய்க்கான சிகிச்சை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால் அரசாங்கத்துக்கு புதிய சக்தியுடன் முன்னோக்கிச் செல்ல முடியுமாகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...