வெலிகந்த பகுதியில் இன்று (13) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தும், மற்றும்  9 பேர் காயமடைந்துமுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் வெலிகந்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெப் ரக வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியதனால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியில் வந்த ஆண் ஒருவரும், கெப் ரக வாகனத்தில் இருந்த பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். கெப் வாகனத்தில் வந்தவர்கள் வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், லொறியில் பயணித்தவர்கள் வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share The News

Post A Comment: