பிரதமர் வெளியேற வேண்டும் - அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ ல.சு.க. 42 பேர் கோரிக்கை!நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோருவதற்கு நேற்றிரவு (02) கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிலுள்ள 42 பேர் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீ ல.சு.க.யின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பில் அறிவிப்பதற்கு இன்று (03) காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இக்குழு சந்திக்கவுள்ளதாகவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
சிலபோது பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யாவிடின், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகவும் இதுதான் இக்குழுவின் ஏகமனதான தீர்மானம் எனவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவும் குறிப்பிட்டுள்ளார்.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...