Header Ads

ad728
  • Breaking News

    நாடு செழிப்பான பாதைக்கு திரும்ப அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பின்னால் அணிதிரளுங்கள்!







    தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 39 ஆவது ஆண்டு விழாவும், 54 ஆவது வீட்டுத்திட்ட திறப்பு விழாவும் இன்று அனுராதபுரம், பளுகஸ்வெவ பிரதேச சபைக்கு உட்பட்ட வாயா உல்பத்த எனும் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபை அமைச்சர் சஜித் பிரேமதாச, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே ஆகயோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

    இவ்வீடமைப்புத்திட்டத்தில் 25 வீடுகள் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு கருத்து தெரிவிக்கையில்

    தற்போதைய இலங்கை அரசியலின் போக்கை நோக்கும் பொழுது இலங்கை வாழ் மக்களின் எதிர்காலம் மிக மோசமாக அமைந்து விடும் என்பதனை எமக்கு தெட்டத்தெளிவாக புலப்படுத்துகிறது. நமது நாட்டு மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைந்து நாடு செழிப்பான பாதைக்கு திரும்ப வேண்டுமானால் நாம் அனைவரும் இன, மத, கட்சி பேதங்களை மறந்து அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பின்னால் அணிதிரளவேண்டும் என தெரிவித்தார்.

    ஊடகப்பிரிவு 

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728