இன மற்றும் மத வன்முறைகள் தொடர்பில் முறையிடுவதற்கு 1956 எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன மற்றும் மத வன்முறைகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு சமாந்தரமாக கிராம மட்டத்தில் நல்லிணக்க சங்கங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் இருமொழி மொழிபெயர்ப்பாளர்ளை பயிற்றுவித்து நியமிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: