நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தீர்மானம் இன்று!பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு கட்சியின் உயர் பீடம் இன்று கூடுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு தாருஸ்ஸலாமில் நடைபெறும் இக்கலந்துரையாடலில் கட்சியின் சகல உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...