அட்டாளைச்சேனை துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படும் நசீர் எம்பி கருத்துநுஸ்கி அஹமட்

அட்டாளைச்சேனை துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படுவதோடு மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீர் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனையின் வீதிகள், குறைபாடாகவுள்ள கட்டிடங்கள், சிறுவர் பூங்காங்கள், தேவையான கட்டிடங்கள், பள்ளிவாசல்கள், பாடசாலைக் கட்டிடங்கள் விளையாட்டு கழகங்களின் அபிவிருத்திகள், பெண்களுக்கான வாழ்வாதார விருத்தி செயற்றிட்டங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தவுள்ளாக அவர் தெரிவித்தார்.


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அவர்களின் நிதியொதிக்கீடுகள், ஏனைய பிரதியமைச்சர்களின் நிதியொதுக்கீடுகள், எனது பிரத்தியேக நிதியொதுக்கீடுகள் என்பன அட்டாளைச்சேனையின் அபிவிருத்திற்கு இனி பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்