முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் இடம்பெற்று வருகின்ற நிகழ்ச்சிநிரலை அவதானிக்கையில் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல், பொருளாதர, அறிவியல் துறைகளுக்கு எதிரான ஓர் போராட்டம் நடைபெறுவது போல் உள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் அமைச்சர்களுக்கும், தலைவர்களுக்கும் பட்டம் பதவி மற்றும் அமைச்சுப் பதவிகளை வழங்கி அவர்களை அரசின் பொம்மைகளாக மாற்றிவிட்டு வளர்ந்துவரும் முஸ்லிம்களின் பொருளாதரம் மற்றும் அறிவியல் துறைக்கு எதிராகவும் முஸ்லிம்களின் இருப்புக்கு எதிராகவும் இப்போராட்டம் இடம்பெறுகின்றது. என்றாலும் இந்த முஸ்லிம்களுக்கு எதிரான இப்போராட்டத்தில் முஸ்லிம்களை போன்று தமிழ் பேசும் இந்துக்களும் கடந்த 6 மாதங்களாக இரகசியமாகவும், பரகசியமாகவும் ஆரம்பித்துள்ளதை சமூகவளைத்தள மற்றும் பத்திரிகை அறிக்கைகள் ஊடாக அவதானிக்க முடின்கின்றது.

வில்பத்து விவகாரம், மாயக்கல்லி புத்தர்சிலை விவகாரம் நமது இருப்புக்கு எதிரான போராட்டமாக உள்ள அதேவேளை தமது கல்வி மற்று, ஆடை கலாசாரத்திற்கு எதிராக திட்டமிட்டு ஆர்பாட்டத்தை இந்து இனவாதிகள் கடந்த வாரம் ஆரம்பித்தனர். அதேவேளை தென்னிலங்கையை அவதானிக்கையில் இவ்வாறு பகிரங்க போராட்டம் இல்லாவிடினும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமிப்பதிலும், முஸ்லிம் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இனவாதத்தை கைகொண்டு புறக்கணிக்கின்றனர். சில சிங்கள பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய வேண்டாம் என்று பாடசாலை நிர்வாகம் கட்டளையிடுவதொடு சில பாடசலைகளில் வாராந்த ஜும்மா தொழுகைக்கும் ஆண் மாணவர்களை செல்ல அனுமதிப்பதில்லை. (கல்விக்காக இஸ்லாத்தை பெற்றோர்கள் புறக்கணிக்கின்றனர் இது தவறாகும்)

இலங்கை முஸ்லிம்களின் பொருளாதரத்திற்கு எதிராக இடம்பெற்ற பாரிய தாக்குதலாக கின்தொட்டை கலவரம், அம்பாறை கலவரம், கண்டிக் கலவரம் காணப்படுகின்றது. என்றாலும் இக்கலவரங்களுக்கு முன் சுமார் 25 இற்கும் மேற்பட்ட வர்தக நிலையங்களுக்கு கடந்த ஏப்ரல் 16 இற்கும் மே 2௦ம் திகதிக்கும் இடையில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்மேற்கொண்டமை மறுக்க முடியாத உண்மையாகும்.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முஸ்லிம்களை வழங்கி மறக்க வைத்து தாக்குகின்றனர். இந்த இனவாத தாக்குதலை சிங்கள மற்றும் தமிழ் இனவாதிகள் சர்வதேச மற்றும் நல்லாட்சி அரசின் இ(ப)ரகசிய ஆதரவுடன் மேற்கோள்கின்றமை பகிரங்க உண்மையாகும்.

இப்னுஅஸாத்

Share The News

Post A Comment: