Apr 23, 2018

கிழக்கு மாகாண சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தலைவர் நியமனம்!



ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தலைவராக கோசல விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவினால் நேற்று ஞாயிற்றுக் கிழமை(22)கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. 

கிழக்கு மாகாண சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட  கோசல விக்ரமநாயக்க கொழும்பில் ஒரு பிரதானமான வியாபாரி என்பதுடன் முன்னால் இலங்கை விமான சேவைகள் போக்குவரத்துச் சபையின் முன்னால் பணிப்பாளரும்,இலங்கை சுற்றுலா பணிப்பாளர் சபை உறுப்பினர் மற்றும் தற்போதைய சார்க் நாடுகளுக்கான சுற்றுலா சபையின்  கடந்த 2004 ம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை உறுப்பினராகவும்,சிறிய நடுத்தர வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி தொடர்பில் மிக நீண்ட கால அனுபவம் திறமையைக் கொண்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post