இலங்கையில் நடைபெறும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா பண்டாரிக்குலத்திலிருந்து 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 மீற்றர் நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பங்குபற்றும் செல்வன் கிந்துஜனை அவரது வீடுசென்று சுகநலன்களை விசாரித்து பாராட்டி அறிவுரைகளையும் வழங்கினார் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ 
காதர் மஸ்தான் அவர்கள். 

வவுனியா  தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பாடசாலைக் காலத்திலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் தனது திறமைகளை காட்டி வந்த செல்வன் சிந்துஜன் மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியவர்.
இவரது சாதனையால் தாமும் தமது மண்ணும் பெருமை கொள்வதாகவும்,நடைபெறும் போட்டியில் கிந்துஜன் ஆசிய சாதனையொன்றை நிகழ்த்தி எமது  மண்ணின் பெருமையை உலகறியச் செய்து புகழ்தேடித்தர தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் குறிப்பிட்டார். 

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டிகள் இம்முறை இலங்கையின் சுகததாச  விளையாட்டரங்கில் மே மாதம் 5,6ம் திகதிகளில்  இடம்பெறுகின்றன.

இப்போட்டிகளில் வடமாகாணத்திலிருந்தும் இரு போட்டியாளர்கள்  பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது. 

ஊடகப்பிரிவு.

Share The News

Post A Comment: