வன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி !!அண்மையில் சர்வதேசத்தையே உலுக்கிய ஒரு பிரச்சினையாக திகன கலவரம் அமைந்திருந்தது. ஒரு சில பேரினவாத காடையர்கள் முஸ்லிம்கள் மீது எல்லைமீறிய காடைத்தனத்தை கட்டவிழ்து விட்டிருந்தனர். இதன் பின்னால் சில அரசியல் வாதிகள் இருந்ததான ஒரு கதை உள்ளது.இன்று நடைபெறும் சில விடயங்களை பார்க்கின்ற போது, இதன் பின்னால் அரசியல் வாதிகள் இருந்துள்ளார்கள் என்பதோடு சேர்த்து யார் இருந்துள்ளார்கள் என்ற விடயத்தையும் யூகித்து கொள்ள முடிகிறது.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் திகனையில் பாதிக்கப்பட்டோருக்கு நஸ்டயீடு வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்தது.இது சிறியளவில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம் தான். திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை பெருமளவில் சிதைத்துவிட்டு, ஒரு சிறிய தொகையை கொடுத்து வாயை மூடப் பார்க்கின்றார்கள்.யானைப் பசிக்கு சோளகப் பொரி கொடுப்பது போன்று என சுருக்கமாக கூறிவிடலாம்.

இந் நஸ்டயீடு வழங்கும் அமைச்சரவை முடிவில் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் நடைபெற்றுள்ளது. இக் கலவரத்தின் போது மரணித்த மூவருக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அப்படியானால், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்ட போது, தவறுதலாக, தன் கையில் வைத்திரிந்த பெட்ரோல் பொம் வெடித்து, மரணித்தவருக்கும் ஐந்து இலட்சம். இவர் தவிர்ந்து, மரணித்த, ஏனைய இருவரும் அநியாயமாக மரணத்தை தழுவியவர்கள். இக் குறித்த நஸ்டயீடு வழங்கும் தீர்மானத்தின் ஊடாக இவர்கள் மூவரும் சமமாக்கப்பட்டுள்ளார்கள்.இது அநியாயமாக மரணித்த இருவரினதும் மரணத்தை ஒரு வகையில் கொச்சைப் படுத்துகிறது எனவும் கூறலாம்.

குறித்த பெட்ரோல் பொம் வெடித்து, மரணித்தவர், தன் மரணத்தை, தானாக தேடிக்கொண்டவர். இவர் தொடர்பில் அனுதாபப்பட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு அனுதாபப்படுவதாக இருந்தால், சமூகத்துக்காக போராடி, உயிர் நீத்தவராக இருக்க வேண்டும். குறித்த அமைச்சரவை தீர்மானத்தின் மூலம், அந் நபர் ஒரு சமூக தியாகி போன்று நோக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம், இவ்வரசானது கலவரத்தில் ஈடுபடுவோரை ஊக்கிவித்துள்ளது எனலாம்.

இச் செயலானது, இதன் பின்னால் இவ்வரசினர் உள்ளார்கள் என்ற உண்மையை தெளிவாக்குகிறது. இன்னுமின்னும், இவ்வரசை நம்பி, பின்னால் செல்வதைப் போன்ற மடமை வேறு எதுவுமில்லை.அ அஹமட்,

ஊடக செயளாலர்,

முஸ்லிம் முற்போக்கு முன்னணி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...