இந்த அரசாங்கத்தால் மக்களுக்கு என்ன பயன்? - மஹிந்த கேள்வி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்...

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது குறித்த பதினாறு அமைச்சர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொள்வார்கள்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது வாக்களித்தவர்கள் இவ்வாறு எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வார்கள்.

பிரதமருக்கு எதிராக வாக்களித்த இந்த பதினாறு அமைச்சர்களும் அரசாங்கத்திற்கு தேவையில்லை என்ற போதிலும், நாட்டு மக்களின் ஆதரவு அவர்களுக்கு உண்டு.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது முதுகெலும்பை நேராக வைத்துக் கொண்டு இந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

இந்த பதினாறு அமைச்சர்களும் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டால் கூட்டு எதிர்க்கட்சி மேலும் வலுப்பெறும்.

எதிர்க்கட்சி மக்களின் இருதயத்திற்கு நெருக்கமாகியுள்ளது. மக்களுக்கு தற்பொழுது எதிர்க்கட்சி தொடர்பில் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியது முதல் மக்களுக்கு என்ன செய்துள்ளது என நாம் கேள்வி எழுப்புகின்றோம் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ள போதிலும், குறித்த 16 அமைச்சர்களும் நாங்கள் அரசிலிருந்து விலகினாலும், மகிந்த அணியுடன் சேரமாட்டோம் என அதிரடியாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அரசாங்கத்தால் மக்களுக்கு என்ன பயன்? - மஹிந்த கேள்வி இந்த அரசாங்கத்தால் மக்களுக்கு என்ன பயன்? -  மஹிந்த கேள்வி Reviewed by NEWS on April 11, 2018 Rating: 5