சிரியா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமாயின் அப்போராட்டத்தில் தானும் இணைந்து கொள்வதாக பிரித்தானிய பிரதமர் தெரேஷா மே தெரிவித்துள்ளார்.
யுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட அமைச்சரவை குழுவொன்றையும் பிரதமர் தெரேஷா மே அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவும், பிரான்சும் சிரியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமாயின் அதற்கு தானும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கடந்த சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சிரியா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகளை ரஷ்யா மேற்கொண்டு வருகின்றது. தற்பொழுது பிரித்தானியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவும் பழுதடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்சுடன் இணைகிறது - பிரித்தானியா அறிவிப்பு
Reviewed by NEWS
on
April 14, 2018
Rating:
