பாலர்களின் விளையாட்டு பரஸ்பர ஒற்றுமைக்கு அடிகோலிடட்டும்.
பாலர்களின் இந்த விளையாட்டுப் போட்டியானது  அவர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் ஒற்றுமையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார். 

இன்று வவுனியா மதீனாநகர் அல்-அக்ஸா முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பொழுதே இக்கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது  கல்வியும் விளையாட்டும் மாணவப் பருவத்தில் இன்றியமையாத கற்றல் செயற்பாடுகளாகும். 

ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் விளையாட்டு அளப்பெரிய பங்கினையாற்றுகின்றது எனவேதான் ஓடி விளையாடு பாப்பா என்று முன்னோர்கள் சொன்னார்கள். அதற்கு காரணம் சோம்பல் கொள்ளாமல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு  மனவலிமை மனோ சக்தி தேவையாகும்.

அதனை விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் இலகுவாகப்பெற்று கல்வியில் சிறந்து விளங்க முடியும் எனவும் குறிப்பிட்டார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் வவுனியா நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கலும் பெற்றோர்கலும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...