அன்வர் ஜே நௌஷாத் -
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் கருதியே நமது கட்சி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம்.நஷீர் தெரிவித்தார்.
நேற்றிரவு இடம்பெற்ற பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமை பற்றி கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஆளும் நல்லாட்சிக்கான பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் ஆணையைக்கு மதிப்பளித்தே நமது அரசியல் உயர்பீடத்தின் ஆதரவுடன் எமது கட்சியின் பாராளுமன்றக் குழு பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் முன் கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தை நாம் மீண்டும் ஒரு வாய்ப்பை நல்லாட்சிக்கு வழங்குவதன் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளோம்.
இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடும் இயக்கமாகவே நமது கட்சியும் கட்சியின் தலைமையும் செயற்பட்டு வருகின்றது. உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு உறுதியற்ற தீர்மானங்களை நாம் பெற முடியாது. மக்களின் எதிர்காலம் பற்றிய பாரிய பொறுப்பு நமக்கிருக்கின்றது.
நமது மக்களின் பல பிரச்சனைகளுக்கும் நாம் பிரதமர் மூலமாக தீர்வொன்றினை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றோம். விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் பட்டதாரிகளின் பிரச்சனைகளுக்கு முக்கியம் கொடுக்க அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் கூறினார்.
முஸ்லிம்களின் நலனுக்காகவே பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம் ; நசீர் எம்.பி
Reviewed by NEWS
on
April 05, 2018
Rating:
