Apr 24, 2018

#வங்குரோத்து #அரசியல்வாதிகள் #வாயடைத்து #போயுள்ளனர்!
( ஜெமீல் அகமட் )

இலங்கை அரசியலில் ஒரு பகடைக்காயாக அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு சமுதாய உணர்வு அற்ற சமுதாயமாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதை  மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் கண்டறிந்து கவலையடைந்த தலைவர்  அதிலிருந்து சமுதாயத்தை  பாதுகாத்து இலங்கை அரசியலில் முஸ்லிம் மக்கள்  கௌரவமாக வாழ வேண்டும் என்று இரவு பகலாக முயற்சி செய்து  தனது சமுதாயத்தை மர நிழலில் அமர வைக்க அவரால் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  அவரின் மறைவுக்கு பின் ஹக்கிம் என்னும் சாரதியால் அரசியல் சந்தையின் ஊடாக  பாதையை விட்டு விலகி செல்வதால்  மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை  சீ என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டது பாவம்  அஸ்ரப் கண்ட கனவுகள் கலைந்து விட்டாலும் அதை நிறைவேற்ற இரவு பகலாக அவரின் அரசியல் பாதை கொள்கையில் வாழும் துணிவுள்ள மகன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்கள் போராடிக்கொண்டு இருக்கின்றார் அதற்கு மக்கள் ஆதரவும் அதிகரித்து கணப்படுகின்றன

கடந்த உள்ளூராச்சி தேர்தலில் அஸ்ரப் அவர்களின் கொள்கையில்  நாடு பூராக தேர்தலில்  களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் கனவிலும் நினைக்காத பாரிய வெற்றியை பெற்றுள்ளனர் அதிலும் மறைந்த தலைவரின் அரசியலை விரும்பிய அம்பாறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்காமல் அமைச்சர் றிசாத் அவர்கள் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்துக்கு அதிக வாக்குகளை மக்கள் வழங்கி ஹக்கிமின் கோட்டையான நிந்ததவூர் சம்மாந்துறை இறக்காமம் போன்ற பிரதேச சபைகள் அமைச்சர் றிசாத் அவர்களின்  கோட்டையாக மக்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இதனால் இன்று மக்களால் தூக்கி வீசப்பட்ட வங்குரோத்து அரசியல்வாதிகள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக போலி பிரச்சாரம் சோடிக்கப்பட்ட போட்டோக்கள் என்பவற்றை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் நடைமுறை உள்ளூராச்சி தேர்தலுக்கு பின் மிகவும் தீவிரமாக கூலிப்படைகள் மூலம் நடைபெறுவதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது

அம்பாறை மாவட்டத்தில் தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட  மக்களை ஏமாற்றுவாதிகயான ஹக்கிமிடமிருந்து மீட்க  எந்த அரசியல்வாதியும் முன் வரவில்லை அவர்களுக்கு மக்கள் ஆதரவுமில்லை

கடந்த 30 வருடமாக தனது சொந்த மாவட்டத்தில் அரசியல் செய்யும் குதிரைப்படை தளபதி ( தேசிய காங்கிரஸ் ) முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் தனது தலைவர் என்று மேடைகளில் வீரம் பேசினாலும் தன் தலைவனை ஏமாற்றும் ஹக்கிம் கூட்டத்தின் கோட்டைகளை கைப்பற்றி சமுதாயத்தை பாதுகாக்க  முடியாமல் தொடர்ந்து தனது ஊரான அக்கறைப்பற்று மண்ணின் சபைகளை நிர்வாகம் செய்யும் அரசியலாகவே அதாவுல்லாஹ் செய்து வருகின்றார் அதனால் அவரின் அரசியல் என்பது  குண்டு சட்டிக்குள் குதிரை ஓடும் அரசியலாகவே இதுவரை இருந்து வருவதால் கடந்த தேர்தலில் மக்கள் ஏமாற்றுவாதிகளை விரட்ட கிழக்கில் விரைந்து வந்த வீர தளபதி அமைச்சர் றிசாத் அவர்களுக்கு அம்பாறை மக்கள் வழங்கிய  ஆதரவு  என்பது இலங்கை அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வங்குரோத்து அரசியல்வாதிகளின் வாயை அடக்கி இருக்கின்றது

தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் அம்பாறை மக்களை  ஏமாற்றி ஹக்கிம் அதாவுல்லாஹ் ஆகியோர் வாழ்ந்தார்களே தவிர அந்த மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு எந்த தீர்வும் பெற்றுக்கொடுக்கவில்லை அதனால்தான் மக்கள் கடந்த தேர்தலில் சமுதாய அரசியல்வாதியான அமைச்சர் றிசாத் அவர்களை மக்கள் ஆதரித்தனர் இந்த உண்மையை மறைக்க இன்று அமைச்சர் றிசாத் மீது  மறைமுகமாக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றனர்   அமைச்சர் றிசாத் இறையச்சம் கொண்ட மனிதர் அவர் மனிதனுக்கு அஞ்சாத சிங்கம் அதனால் வங்குரோத்து அரசியல்வாதிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை பார்த்து கவலைப்படாமல் சிரிக்கின்ற மனிதன் எனவே இறையச்சம் இல்லாதவர்கள் இனிமேலாவது அல்லாஹ்வுக்கு பயந்து அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக போலி பிரச்சாரம் செய்யாமல் அவருடன் இனைந்து சமுதாயத்துக்கான அரசியல் செய்ய முன் வர வேண்டும்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network