இரவு நேர முஸ்லிம் ஹோட்டல்களும்; சாப்பாட்டு பில்களால் அதிரும் பஸ்பயணிகளும் !


ஷேக் மிஷாரி 

கொழும்பு - யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய நகரிங்களிலிருந்து இரு பக்க பஸ்களில் பயணிக்கும் அதிக பயணிகள் இரவு நேர சாப்பாட்டிற்காக நிற்பது 97% முஸ்லிம் ஹோட்டல்களில்தான், பெயர்கள் மட்டும்தான் முஸ்லிம் ஹோட்டல்கள் சுத்தம் - பணியாளர்களின் நடைமுறைகள் - அதிகப்படியான விலைகள் என பலநுாற்றுக்கணக்கான பிரச்சினைகள் இருந்தாலும் வேறு வழியின்றி அடக்கி வாசிக்கின்றனர் பயணிகள்.

சமூகத்தின் பாதுகாப்பு கருதி நம பிழைகளை சொல்லக்கூடாது என்று விட்டு விடுவதனால் அதிக பிழைகள் நடக்கிறது, அதற்காகவே இந்த பதிவு.

அன்புள்ள ஹோட்டல் முதலாளிமார்களுக்கு, அல்லது குறித்த ஹோட்டல்கள் இருக்கும் பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கு!

இஸ்லாம் வாழ்வதற்கான மார்க்கம், மார்கத்தின் முக்கிய விடயம் நமது வாழ்வியலை பொறுத்தே மற்றைய சமூகங்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வர், அஹ்லாக்குகள் பேணப்படுதல் வேண்டும், கடந்த காலங்களில் நாங்கள் விட்ட தவறினால் ஆயுிரக்கணக்கான கோடிகளை இழந்து தவிக்கிறோம், இருப்புகள் கேள்விக்குறியாகியுள்ளது.

உங்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான், நல்ல சாப்பாட்டினை வழங்கி, நல்ல சேவைகளை பகிர்ந்து சகோதர இன சகோதரர்களை நம்வசப்படுத்த முடியும், அதை விடுத்து மேற்சொன்ன கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்குதலை கைவிட்டு விடுங்கள்.

இரவு நேர முஸ்லிம் ஹோட்டல்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினரால் பேணப்படுதல் வேண்டும்.

ஹோட்டலின் சுத்தம், பொருட்களின் விலைகள், மாற்றுமத சகோதரர்களுக்கு விலைக்குறைப்பு, பணியாளர்களின் அஹ்லாக்குகள் என்பன பேணப்படுதல் வேண்டும்.
இரவு நேர முஸ்லிம் ஹோட்டல்களும்; சாப்பாட்டு பில்களால் அதிரும் பஸ்பயணிகளும் ! இரவு நேர முஸ்லிம் ஹோட்டல்களும்; சாப்பாட்டு பில்களால் அதிரும் பஸ்பயணிகளும் ! Reviewed by NEWS on April 14, 2018 Rating: 5