வெசாக் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் வாகரை ரிதிதென்னை ஜும்ஆ பள்ளிவாயல் முன்பாக வெசாக் தினத்தினை முன்னிட்டு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வாகரை பிரதேச சபையின் உறுப்பினர் முகமட் தாஹீர் தலைமையில் நடைபெற்ற வெசாக் நிகழ்வில் புணாணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபாலி ஹேரத் கலந்து கொண்டதுடன், மூன்று மத குருமார்கள் கலந்து கொண்டு ஆசியுரையினை வழங்கினார்கள்.

இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் புணாணை பொலிஸ் நிலையம், ரிதிதென்னை அபூபக்கர் சித்திக் ஜும்ஆ பள்ளிவாயல், ரிதிதென்னை கிராம மக்கள், ரிதிதென்னை ஆட்டோ சங்கம், ரிதிதென்னை விவசாயிகள் சங்கம் என்பன இணைந்து குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர்.

இதன்போது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியால் செல்லும் பயணிகளுக்கு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

Share The News

Post A Comment: