மாகாண சபை தேர்தலை ஒரே நாளில் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த நேற்று கூடிய கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பெரும்பாலானோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பான இறுதி இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை என எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது இது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளாக அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share The News

Post A Comment: