அரசாங்கம் மீது சிறுபான்மைக் கட்சிகள் அதிருப்தி!


தமிழ், முஸ்லிம், சிறுபான்மை சமூகங்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருப்பதை தான் உணர்வதாகவும் அதனை நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடந்த  வியாழக்கிழமை (29) மாலை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கலந்துகொள்ள வில்லை.
பங்காளிக் கட்சிகள் சார்பில் அமைச்சர்கள் மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, டாக்டர் ராஜித சேனாரத்ன, பழனி திகாம்பரம் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி செயலாளர் கபீர் ஹாஷிம், கட்சி உயர்மட்டத்தைச் சேர்ந்த சிலரும் கலந்து கொண்டனர்.
நல்லாட்சிப் பயணத்தில் கடந்த மூன்றாண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக எதுவும் இடம்பெறவில்லை. மஹிந்த ஆட்சியில் போன்றே இந்த ஆட்சியிலும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் உணர்கின்றனர் என அமைச்சர் மனோகணேசன் பிரதமரிடம்  எடுத்துரைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...