ஐக்கியமே பாக்கியம்! ஸாஹிரா நடை பவனிக்கான ரீ சேர்ட் அறிமுகம்!


எம்.வை.அமீர்

ஐக்கியமே பாக்கியம் எனும் தொனிப்பொருளில் 2018-04-14 ஆம் திகதி, ஸாஹிரா முற்றலில் இருந்து ஆரம்பிக்கவுள்ள தேசத்துக்கு செய்தி சொல்லும் விதத்திலான நடை பவனியின் உத்தியோகபூர்வ ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு அதிபர் எம்.எஸ்.முகம்மட் தலைமையில் 2018-04-13 ஆம் திகதி மாலை பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின்போது ஸாஹிராவின் பிள்ளைகள் ரீ சேர்ட்களை பரிமாறிக்கொண்டனர்.

பாடசாலை சமூகம்பெற்றோர்கள்ஆசிரிய பெருந்தகைகள்மாணவ செல்வங்கள்ஸாஹிராவின் முத்தான பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றினைந்து மிக நீண்ட கால முயற்சியின் பலனாக இந்த நாட்டின் பலபாகங்களிலும் சர்வதேசத்திலும் பரந்துபட்டு வாழும் கல்முனை ஸாஹிராவின் முத்துக்களான அத்தனை பழைய மாணவர்களையும் ஓரணியில் திரள ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இங்கு கல்விகற்ற எல்லோருக்கும் திருநாளாக முக மலர்ச்சியோடு புன்னகைகளை உதிர்த்து பரஸ்பர புரிந்துணர்வுகளை பரிமாறிக்கொள்ளும் நாளை நோக்கிய பயணத்துக்காய் ஸாஹிராவின் சொந்தங்கள்......

ஐக்கியமே பாக்கியம்! ஸாஹிரா நடை பவனிக்கான ரீ சேர்ட் அறிமுகம்! ஐக்கியமே பாக்கியம்! ஸாஹிரா நடை பவனிக்கான ரீ சேர்ட் அறிமுகம்! Reviewed by NEWS on April 14, 2018 Rating: 5