நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தோர் கூட்டு எதிரணியுடன் இணைந்து கொள்வார்களா?அடிக்கடி அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டுவருவதனால் நாட்டுக்கு எந்தப் பலனும் இல்லையென கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி. தெரிவித்துள்ளார்.
புதிதாக சத்தியப்பிரமாணம் செய்த அமைச்சர்கள் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரும் அடுத்த பாராளுமன்ற அமர்வில் கூட்டு எதிரணியுடன் இணைந்து கொள்வார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...