Header Ads

ad728
 • Breaking News

  ஓட்டமாவடி பிரதேச சபை கை நழுவினாலும் றியாலினுடைய அரசியல் பயணம் வெற்றியடைந்தே உள்ளது!  ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


  அரசியலில் WIN-WIN Theory என்பார்கள். வெற்றியடைந்தாலும் வெற்றி பெறுவது அல்லது தோற்றாலும் வெற்றியடைவது. இதற்கு மிகப்பொறுத்தமான உதாரணம்தான் கடந்த அரசாங்கத்தில் பொதுபலசேனாவின் இனவாதம் தொடர்பிலான பிரச்சனை எழுந்த பொழுது அதனை மஹிந்த ராஜபக்ச அடக்கினாலும் ரணிலுக்கு வெற்றி, அடக்கா விட்டாலும் ரணிலுக்கு வெற்றி என்பதே உண்மையான அரசியல் விளையாட்டாக இருந்தது.

  றியால் ஓட்டமாவடி பிரதேச சபை விடயத்தில் தோல்வியடைந்திருந்தாலும் அவருடைய எதிர்கால அரசியல் பயணத்தில் வெற்றியடைந்தே உள்ளார் என்பது சாதாரண மக்களால் விளங்கிகொள்ள முடியா விட்டாலும் நிச்சயமாக 17 வருட கால அரசியலில் இருக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு விளங்காமல் இருக்கவும் முடியாது. அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவரால் மேற்கொள்ளாமல் இருக்கவும் முடியாது.

  தனது கோட்டையாக கருதப்பட்ட ஓட்டமாவடியில் 200க்கும் அதிகமான வாக்குகளால் தோல்வி அடைந்ததோடு, ஒரு உறுப்பினரையும் குறைவாக பெற்று முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைப்பாளர் ரியாலிடம் தோல்விய கண்ட அமீர் அலிக்கு கொஞ்சமாவது மகிழ்ச்சியை கொடுத்தது இரண்டாம் வட்டராத்திற்கு சொந்தக்காரனான இலவைதம்பி அஸ்மிக்கு தேர்தலில் கிடைத்த தனிப்பட்ட வெற்றியாகும். இல்லாவிட்டால் வாக்கெடுப்பு இன்றியே முஸ்லிம் காங்கிரஸ் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றியிருக்கும்.

  இது எல்லாம் ஒரு புறமிருக்க…. அமைப்பாளர் ரியாலுனுடைய எதிர் கால அரசியல் பயணமானது மிகவும் வலுவான நிலையில் மேலும் உறுதி செய்யப்பட்ட விடயமாகவே தவிசாளர் பதவியினை மம்மலி விதானைக்கு கொடுக்கபடாமை,  விஜிதா அன்வருக்கு கொடுக்க நாடியமை அல்லது ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியானது அமீர் அலியின் கைகளுக்கு மாறியமை என்பவைகள் அரசியல் எனும் வட்டத்திற்குள் மல்யுத்தம் செய்பவர்களுக்கு அப்பால் அதுக்குள் நின்று கொண்டு தலையை பயண்படுத்தி சதுரங்கம் விளையாடுபவர்களுக்கு நன்றாய் புரியும்.

  ஹக்கீமிற்கும் தனக்கு உள்ள அரசியல் சானக்கிய போராட்டம் என்பதற்கு அப்பால் பிரதி அமைச்சர் அமீர் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியானது முஸ்லிம் காங்கிரசின் கைகளுக்குள் சென்று விட்டால் தனது எதிர் கால அரசியல் பயணம் சூனியமாக்கப்பட்டு முடிவிற்கு கொண்டு வரப்பட்டு விடும் என்ற சிந்தனையில் இருந்தவருக்கு தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் உதவிகளை கொண்டுதான் குறித்த ஓட்டமாவடி பிரதேச சபையை கைப்பற்ற வேண்டும் என்ற சித்த விளையாட்டில் இறுதி நிமிடம் வரைக்கும் இருந்த திண்டாட்டத்திற்கு மத்தியில் தப்பி பிழைத்துள்ளார்.

  இது வரை காலமும் முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவபடுத்தி பாராளுமன்ற, மாகாண சபை தேர்தல்களில் களமிறங்கியவர்களோ அல்லது அமைப்பாளர்களாக இருந்தவர்களோ ஓட்டமாவடி எனும் அரசியல் கோட்டையினை வென்ற சரித்திரம் கிடையாது அவர்களால் அரசியலில் நிலைத்திருந்த வரலாறும் கிடையாது.. ஆனால் அமைப்பாளர் ரியால் பாராளுமன்ற தோல்விக்கு பிற்பாடு அரசியல் முகவரியினை தொலைத்த ஏனைய வேட்பாளர்களை போன்றல்லாது தலைமை ஹக்கீமிடம் தனக்கு இருந்த நெருக்கத்தினை வைத்து களத்திலே பல வியூகங்களை தனக்கே உரிய பானியில் அமைத்து கொண்டு ஓட்டமாவடி எனும் அமீர் அலியின் கோட்டைக்குள் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பாரிய ஓட்டையினை ஏற்படுத்தினார்.

  அது அவருடைய எதிர் கால அரசியல் திட்டங்களுக்கு கிடைத்துள்ள பாரிய வெற்றியாகவும், அரசியல் காய் நகர்த்தல்களில் அவருக்கு கிடைத்துள்ள முதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. ஆகவே தனக்கு கல்குடாவில் கிடைத்துள்ள அரசியல் அங்கீகாரம்- வெற்றி என்பவைகளை இன்னொருவருக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கு எந்த அரசியல்வாதியும் விரும்பமாட்டான். அதில் ரியால் மிகவும் உறுதியாக இருக்கின்றார் என்பதே ஓட்டமாவடியில் அவருடைய உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தவிசாளர்களுக்கனான போட்டியும், தவிசாளர் பதவியானது அமீர் அலியின் கைகளுக்கு சென்றமையும் தூர நோக்கோடு சிந்திக்கும் பகுத்தறிவுள்ள சாதராணமாக அரசியல் தெரிந்த மனிதர்களுக்கு நன்றாக விளங்கும்.

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad

  ad728