பள்ளிவாசலில் பிரித் ஓத அனுமதித்தவர்கள் நாளை பௌத்த சிலையையும் வைக்க அனுமதிப்பார்கள்?


கண்டி தென்னங்கும்புர பகுதியில் அல்லாஹ்வுடைய இறையில்லத்தில் இப்படியான பிரித் ஓதப்படுவது சமூக நல்லினக்கத்தை வெளிப்படுத்தும் என்று ஜம்யியத்துல் உலமாவின் ஒருவர் சொன்னதுக்கிணங்க இன்று இந்நிகழ்ச்சி அரங்கேறுகிறது.
மத நல்லிணக்கத்திற்கு வேறு பல வழிகள் இருந்தும் இப்படியான ஈனச்செயல்கள் எதிர்காலத்தில் சர்ச்சைகளையும், அவப்பெயரையும் ஏற்படுத்த போதுமாக இருக்கிறது.

தாய்லாந்து மற்றும் மியன்மார் உட்பட வெளிநாட்டு பெளத்த துறவிகளின் (பிக்குகளின்) பங்கேற்புடன் கண்டி தென்னகும்புற பள்ளிவாசலுக்குள் இன்று காலை (03.04.2018) இடம்பெற்ற “பிரித்” ஓதப்படும் காட்சியே இது!

கண்டிக்கு பாத யாத்திரை சென்ற பிக்குகளை அன்போடு பள்ளிக்குள் அழைத்து விருந்துபசாரம் பண்ணி அனுப்பியதாக மஸ்ஜித் நிர்வாகம் தெரிவிக்கிறது.
பள்ளிவாசலில் பிரித் ஓத அனுமதித்தவர்கள் நாளை பௌத்த சிலையையும் வைக்க அனுமதிப்பார்கள்? பள்ளிவாசலில் பிரித் ஓத அனுமதித்தவர்கள் நாளை பௌத்த சிலையையும் வைக்க அனுமதிப்பார்கள்? Reviewed by NEWS on April 03, 2018 Rating: 5